Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

கோலம்

ஞான ஆலயம் – டிசம்பர் 2001 இதழில் வெளியானது





கோலம் என்பதற்கு அழகு என்று பொருள். சூரியன் உதிக்குமுன் எழுந்து பசுஞ்சாணத்தால் வாசல் தெளித்து கோலமிடுவது வீட்டிற்கு ஐஸ்வர்யம் சேர்க்கும். கோலம் போடுவதால் மனம் உற்சாகம் பெறும். உடலுக்கு நல்ல தேகப் பயிற்சி. தற்போதைய அவசர உலகத்தில் தினசரி கோலம் போடாவிட்டாலும், விசேஷங்கள், பண்டிகை நாட்களில் எந்தப் பெண்ணும் கோலம் போடத் தவறமாட்டாள்.

கோல இழைகளை வலப்புறமாக மட்டுமே இழுக்க வேண்டும். இடப்புறமாக இழுக்கக் கூடாது.

கோலத்தை காலால் அழிக்கக் கூடாது. குழந்தை பிறந்தவுடன், அது இரவாக இருந்தாலும் கோலம் போடலாம். விசேஷ நாட்களில் மாக்கோலமிட்டு காவி பூசுவது சிவ சக்தி ஐக்யத்தை உணர்த்தும். வெண்மை – சிவன், சிவப்பு – காவி – சக்தி.

எறும்பு முதலிய ஜீவங்களிடம் நாம் பரிவு காட்ட வேண்டுமென்பதை உணர்த்தவே அரிசி மாவினால் கோலம் போடுகிறோம். பின்னல், சுழிக் கோலங்கள் வாழ்க்கை சுகம், துக்கம் இரண்டும் இணைந்தது என்பதையும், சுழிகளைப் போல் துன்பம் வந்தாலும் திடமாக இருக்க வேண்டுமென்றும் உணர்த்துகின்றன.

கோலப் பொடிகளின் நிறங்கள் ஒவ்வொன்றும் ஒரு குணத்தை வெளிப்படுத்துகின்றன.

மஞ்சள் – மங்கலம்; பச்சை – அன்பு; ஆரஞ்சு – தியாகம்; வெள்ளை – தூய்மை; சிவப்பு – வீரம்.

படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவது (_____) லட்சுமி வருவதைத் தடுக்கும். வீட்டின் உள் நோக்கிப் போடுவது (|| || ||) தெய்வங்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்பதாகும்.


மார்கழி மாதம் விடியற்காலை காற்றில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் ஓசோன் வாயு கலந்திருப்பதால் விடிகாலை எழுந்து கோலம் போடுவது நல்லது. வீட்டின் விசேஷங்களுக்கும், அழகுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் கோலத்தை தினமும் முடியாவிட்டாலும் விசேஷ நாட்களில் மட்டுமாவது போட்டு லட்சுமி கடாட்சத்தைப் பெறுவோமாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக