Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

மார்கழி குருவார பூஜை





சினேகிதி ஜூன், 2005 இதழில் வெளியானது


இதே கட்டுரை ஞான ஆலயம் டிசம்பர் 2005 இதழிலும் வெளியாகியுள்ளது. கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.

மகாராஷ்டிராவின் ஆஸ்தான தேவி ஸ்ரீமகாலட்சுமி. மும்பையின் வளத்திற்குக் காரணமான மும்பை மகாலட்சுமியும், சக்தி பீட நாயகியான கோலாப்பூர் மகாலட்சுமியும் உலகப் புகழ் பெற்ற வரப்ரசாதியான தேவிகள். வைபவ லட்சுமி பூஜையை மராட்டியப் பெண்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பர்.

மார்கழி மாத குருவாரமான வியாழக் கிழமைகளில் செய்யும் மகாலட்சுமி பூஜையால், தனம், தான்யம், சுகசம்பத், புத்ர பிராப்தி, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என மகாலட்சுமியாலேயே சொல்லப்பட்டிருப்பதால், இதை அனைத்து வீடுகளிலும் தவறாமல், மிக நியமித்துடன் செய்கிறார்கள்.

பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் கூட அன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை விளக்கேற்றி பூஜை செய்து, இந்த விரதத்திற்கான கதையைப் படித்து, ஆரத்தி காட்டி நமஸ்கரித்து, ஐந்து சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் லொடுத்த பின்பே உணவு உண்பர். இப்பூஜை முடிந்து சொல்லப்படும் 'நமஸ்கார சுலோகம்' ஸ்ரீலட்சுமி நமநாஷ்டகம் எனப்படும். இதை எல்லா லட்சுமி பூஜை முடித்த பின்பும் சொல்வது நற்பலன்களைத் தரும்.

ஸ்ரீலட்சுமி நமநாஷ்டகம்
நமஸ்கார மஹாமாயே ஜகன்மாதே பராத்பரி/
சங்கு சக்ர கதாஹஸ்தெ லட்சுமீ மாதே நமோஸ்துதே//
ஆதி நாஹி அந்த நாஹி ஆதுசக்தி கரோகரி/
விச்வாதாரே விஷ்ணுகாந்தே லட்சுமீ மாதே நமோஸ்துதே//
சர்வ வியாபீ சர்வ சாக்ஷி சுத்த ஸத்வ ஸ்வரூபிணி/
சர்வக்ஞே சிந்து ஸம்பூதே லட்சுமீ மாதே நமோஸ்துதே//
கமலே கமல நேத்ரே கோமலே கமலாஸனே/
மங்களே முதிதே முக்தே லட்சுமீ மாதே நமோஸ்துதே//
ஷிப்ரவஸ்த்ர தாரிணீ ஹே கருடத்வஜ பாமினி/
திவ்யாலங்கார பூஷிதே லட்சுமீ மாதே நமோஸ்துதே//
ஸர்வ துக்க ஹரே தேவி புஜங்க சயனாங்கனே/
பகவதி பாக்யதாரி லட்சுமீ மாதே நமோஸ்துதே//
ஸித்தி புத்தி புக்தி முக்தி சந்ததி சுக சம்பதா/
ஆயுர் ஆரோக்கிய ஹி தேஸி லட்சுமீ மாதே நமோஸ்துதே//
நமோ: நம: மகாலட்சுமி தனவைபவ தாயகே/
தைன்ய தூர் கரீ மாஜே பிரார்த்தீ மிலிந்த மாதவ//
வாசிதா ஜகதா பாவே நித்யயா நமநாஷ்டகா/
இச்சி லேலே மிளே ஸாரே ஸத்ய ச்ரத்தாலு பாவிகா//













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக