Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

தீபாவளி ஸ்பெஷல்-4

ஆலயம் சினேகிதி – தீபாவளி சிறப்பிதழ் – நவம்பர் 2003 ல் வெளியானது

மினி ரிங் பால்ஸ்

தேவையானவை:

மைதா - ½ கப்
பாம்பே ரவா - ½ கப்
அரிசி மாவு - ¾ கப்
தேங்காய்ப் பாள் - ½ கப்
பெருங்காயப் பொடி, மிளகு சீரகப் பொடி – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு,
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

மைதாவை ஆவியில் வேகவிட்டுக் கொள்ளவும். ஆறியதும் உதிர்த்து அத்துடன் ரவா, அரிசிமாவு சேர்த்து நன்கு கலந்து, பெருங்காயப் பொடி, மிளகு, சீரகப்பொடி, உப்பு, வெண்ணெய், தேங்காய்ப் பால் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து நீளமாக உருட்டி, இரு முனையும் சேர்த்து சிறு வட்டமாக வரும்படி செய்து கொள்ளவும். பிளாஸ்டிக் பேப்பரில் போட்டுக் கொண்டு, எண்ணெயைக் காய வைத்து பொன்னிறமாக வேக விடவும். இதை செய்ய சற்று நேரமானாலும் ருசியாக இருக்கும்.



மல்டி கலர் காரா பூந்தி

தேவையானவை:

மைதா – 2 கப்
கடலை மாவு - ½ கப்
அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு – 1 சிட்டிகை
பெருங்காயப்பொடி, உப்பு - தேவையான அளவு,
காரப்பொடி - 1½ டீஸ்பூன்
முந்திரி – 20
தேவைக்கேற்ப எண்ணெய், பச்சை ஆரஞ்சு, வண்ணப்பொடி.

செய்முறை:

மைதா, கடலை மாவு, அரிசி மாவைச் சலித்து அத்துடன் பெருங்காயப்பொடி, உப்பு, காரப்பொடி, சோடா உப்பு சேர்த்துத் தேவையான நீர் விட்டு பூந்தி தேய்க்கும் பதமாக சற்றுத் தளரக் கரைத்துக் கொள்ளவும்.

எண்ணெயைக் காய வைத்து, முதலில் 2 ஈடுகள் அப்படியே பூந்தி தேய்க்கவும். பின்பு, அதை இரண்டாகப் பிரித்து, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களைக் கலந்து, 2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி, கறிவேப்பிலை 2 கொத்து ஆய்ந்து வறுத்துப் போட்டு சேர்க்கவும். கலர் ஃபுல்லான இந்த பூந்தியை குழந்தைகள் மிக விரும்பி உண்பார்கள்


பாம்பே மிக்ஸர்
தேவையானவை:

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
பச்சைப் பயறு – 25 கிராம்
நிலக்கடலை – 50 கிராம்
முந்திரி – 25 கிராம்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – அம்சூர் பவுடர் - ½ டீஸ்பூன்
சர்க்கரை - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை -2 கொத்து
திராட்சை – 10 கிராம்
எண்ணெய், விழுது நெய் – 6 டேபிள் ஸ்பூன்
காரப்பொடி – 1 டீஸ்பூன்
அவல் – 1 கப்
சோடா உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:

முதலில் ஓமப்பொடி தயாரிக்க:

½ கப் கடலை மாவுடன் ¼ கப் அரிசி மாவு, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசைந்து ஓமப்பொடி அச்சில், காய்ந்த எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

காரா சேவை தயாரிக்க:

½ கப் கடலை மாவுடன் ¼ கப்புக்கு சற்று குறைவாக அரிசி மாவு சேர்த்து, உப்பு, காரப்பொடி, விழுது நெய் மூன்று டீஸ்பூன் சேர்த்து காராசேவை தயாரிக்கவும்.

பூந்திக்கு:

½ கப் கடலை மாவுடன் மீதமுள்ள சிறிது அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, சோடா உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து பூந்தி தயாரிக்கவும்.

பச்சைப் பயறை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து வடிகட்டிப் பரவலாக சற்று உலர்த்தவும்.

எண்ணெயைக் காயவைத்து பாசிப் பயறை கை கையாகப் போட்டு வறுத்து எடுக்கவும். அவலையும் சுத்தம் செய்துவிட்டுப் பொரித்து எடுக்கவும். முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் வறுக்கவும்.

ஓமப்பொடி, காரா சேவை, பூந்தி, வறுத்த பயறு, அவல், முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை இவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அத்துடன் காரப்பொடி, உப்பு, சாட்மசாலா, அம்சூர் பொடி, சர்க்கரை சேர்த்து 2 டீஸ்பூன் நெய்யை உருக வைத்து ஊற்றி நன்கு கலக்கவும். இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையுடன் பாம்பே மிக்ஸர் மிக ருசியாக இருக்கும்.






டேஸ்டி காஜா
தேவையானவை:

மைதா – 2 கப்
அரிசி மாவு – 1/8 கப்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
காரப்பொடி 1½ முதல் 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

மைதா மாவுடன், உப்பு, காரப்பொடி, 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாகப் பிசையவும். ஒரு தட்டில் மீதியுள்ள நெய்யைப் போட்டு அதில் அரிசி மாவு போட்டு நுரைவரக் குழைத்து பேஸ்ட் போல் பதிர் தயாரிக்கவும்.

பிசைந்த மாவை நிதானமாக சப்பாத்தி இடவும். அதன் மேல் பதிரை ஒரு ஸ்பூன் தடவி, மேலே இன்னொரு சப்பத்தியைப் போட்டு இறுக்கமாகச் சுருட்டவும். அதனை 10 அல்லது 12 துண்டுகளாக வெட்டி அதனைக் குட்டி சப்பாத்தியாக இட்டு, ஒரு டப்பா மூடியால் வட்டமாக வெட்டிக் கொள்ளவும். பின்பு அதனை அரை வட்டமாக மடித்து, அதையும் மடித்து முக்கோணமாக ஆக்கி ஓரத்தை நன்கு ஒட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சிறிய மூடியால் வெட்டி மடித்தால் குட்டி, குட்டி காஜாக்களாக பார்க்க அழகாக இருக்கும், கனமாக இருப்பதால் சற்று நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.



ரவா பட்டன்ஸ்

தேவையானவை:

ரவா – 1 கப்
மைதா - ¼ கப்
துருவிய தேங்காய் - ½ கப்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 8
எள் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி – சிறிது, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

இதற்கு நைஸான பாம்பே ரவாதான் ஏற்றது. மைதாவை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாயை நைஸாக அரைக்கவும். ரவா, மைதா, அரைத்த விழுது, பெருங்காயம் , வெண்ணெய், உப்பு, சேர்த்துப் பிசையவும்.


சிறிய சீடையளவு உருட்டி, விரலால் நடுவில் அமுக்கி, தட்டையாக்கிப் பிளாஸ்டிக் பேப்பரில் போடவும். பின்பு எண்ணெயில் வேகவிட்டுப் பொன்னிறமாக எடுக்கவும். காரப்பொடி போட்டுச் செய்வது போலில்லாமல், இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக