உலகிலுள்ள உலோகங்களிலேயே
அனைவரையும் கவர்ந்ததும் விலை மதிப்புள்ளதுமான தங்கம் பற்றி அறியாதவர் கிடையாது. ‘ஸதபாத
ப்ரம்மணா’ என்ற நூலில் தங்கம், அக்னி பகவானின் வித்தாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
புராணங்களின் கூற்றுப்படி தேவலோக அரம்பையர்களில் ஒருத்தியான ஊர்வசி தங்க வண்ண
மேனியுடன் விளங்கியதாகத் தெரிகிறது!
பார்வதியின் கருமை வண்ணத்தை
சிவபெருமான் அடிக்கடி பரிகசிக்க, பார்வதி தங்க மேனியளாக ‘கௌரி’ என்ற அவதாரத்தை
வரமாகப் பெற்றாளாம்! தங்கத்தின் ஆசையில் அம்பிகையும் மயங்கியிருக்கிறாரெனில்,
சாமான்ய பெண்கள் மயங்குவதில் தவறென்ன!
இத்தனை பெருமையும், மேண்மையுமான
தங்க நகைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம் தானே? அதற்கான சில டிப்ஸ்!
Ø பாத்திர தேய்க்கும்போது,
துணி துவைக்கும்போது, விளையாடும் போது, தோட்டவேலை செய்யும் நேரங்களில் நகைகளைக்
கழற்றி விடுங்கள். சோப், மண் இவற்றிலுள்ள ரசாயனப் பொருட்களால் நகைகள் வீணாகி
விடும்
Ø வைரம், முத்து,
பவழம் பதித்த நகைகளை மிக ஜாக்கிரதையாகக் கையாளாவும், பராமரிக்கவும் வேண்டும்,
கற்கள், முத்து சற்று லூஸானாலும் எண்ணெய், அழுக்குகள் அவற்றினுள் இறங்கி
வீணாகிவிடும், பளபளப்பும் குறைந்து விடும்.
Ø ஒவ்வொரு முறை
உபயோகப் படுத்தி விட்டு, உள்ளே எடுத்து வைக்குமுன் ஊக்குகள் சரியாக இருக்கிறதா
என்று சரி பார்க்கவும். வருடம் ஒரு முறை ஒரு நல்ல நகை செய்பவரிடம் கொடுத்து சரி
செய்யவும்.
Ø நகைகள்
எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கக் கூடாது. ஒன்றுடன் ஒன்று உராய்ந்து
பளபளப்பு நீங்கி, மங்கி விடும். ஒவ்வொன்றையும் அதற்கான வெல்வட் துணி பொருந்திய
பெட்டிகளில் வைக்கவும். செயின்கள், பிரேஸ்லெட், மாட்டல் இவற்றை அதற்கான நீளப்
பெட்டிகளிலும், வளையல்கள், தோடு, மூக்குத்திகளை அதற்குரிய பெட்டிகளிலும்
வைக்கவும். மென்மையான சோப் பவுடரை இளம் சூடான நீரில் கரைத்து, அதில் நகைகளை சற்று
நேரம் ஊற வைத்து, ஒரு பல் தேய்க்கும் பிரஷ்ஷால் லேசாகத் தேய்த்து அலம்பவும்.
அவற்றை ஒரு வடிகட்டியில் கொட்டி, மீண்டும் னல்ல நீரால் அலம்பி, ஒரு மிருதுவான
துணியில் பிரித்து காய வைத்து எடுத்து வைக்கவும்.
Ø வைர நகைகளை அணியும்
போதும், எடுத்து வைக்கும் போதும் மிக கவனமாகக் கையாளாவும். கீழே அமர்ந்து
கழட்டுவதும், போடுவதும் பாதுகாப்பானது.
Ø தங்கம், வெள்ளி
இவற்றை வளையம், செயின், கொலுசு, மெட்டி என்று அணியும்போது அவை உடலில் பட்டுக்
கொண்டே இருப்பது உடலுக்கு நலம் பயக்கும்.
Ø தங்கத்திலிருந்து
தயாரிக்கும் ‘தங்க பஸ்பம்’ கலந்த லேகியங்கள் உடலுக்கு வலுவையும், அழகையும்
கூட்டும் என்பது மருத்துவ உண்மை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக