Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

நிலக்கடலை பர்பி


தேவியின் கண்மணி 1997ம் இதழில் வெளியானது




தேவையானவை:

நிலக்கடலை – 250 கிராம்
சர்க்கரை - ½ கிலோ
நெய் - ¼ கிலோ
தேங்காய் – 1 மூடி
ஏலப்பொடி, முந்திரி, கலர், பச்சைக் கற்பூரம் தேவையான அளவு.

செய்முறை:

நிலக்கடலையை கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஊறவைத்து தோலை உரித்து விட்டு, நைஸாக கெட்டி விழுதாக மிக்ஸியில் அரைக்கவும். தேங்காயைத் துருவிக் கொண்டு முந்திரி பருப்பை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.


சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு அடுப்பில் வைத்து, கம்பி பதமான பின்பு, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறி, சற்று வெந்ததும், தேங்காய்த் துருவலைப் போட்டு நெய்யையும் விட்டு கிளறி கெட்டியானதும் அதில் கேசரி கலர்ப் பொடியைப் போட்டு கலந்து முந்திரி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் போட்டு நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும். இது மிகவும் ருசியான ஒரு இனிப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக