Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

இட்டாலியன் நட்பால்ஸ்


சுமங்கலி அக்டோபர் 1986 இதழில் வெளியானது



தேவையான பொருட்கள்:

மைதா – 200 கி.
வெண்ணெய் – 100 கி.
பாதாம் எஸென்ஸ் – 1 டீஸ்பூன்
வெணிலா எஸென்ஸ் – 1 டீஸ்பூன்
ஜாம் - ½ கப்
பிஸ்தா பருப்பு – 25
முட்டை – 1
சீனி – 50 கி.
உப்பு சிறிதளவு

செய்முறை:

வெண்ணெயைக் காய்ச்சவும். அது நெய்யாக மாறும் முன்பு (அதாவது முக்கால் காய்ந்ததும்) சர்க்கரையை அதில் போட்டு நன்கு கிளறவும். இதில் உப்புடன் கலந்த மைதாவைக் கொட்டவும். இது சேர்ந்து வரும் போது முட்டையை உடைத்து அதில் கொட்டவும். பாதாம், வெணிலா எஸென்ஸ்களை ஊற்றவும். அடுப்பிலிருந்து இறக்கி சற்று ஆறியதும் இதை சிறீய பந்து அளவிற்கு உருட்டவும்.

ஒவ்வொரு பந்திலும் ஒரு பிஸ்தாவை வைக்கவும். இந்த உருண்டைகளின் மேல் கட்டை விரலால் அமுக்கி சிறிய பள்ளம் செய்து அதில் ஜாமை வைக்கவும். பின் தோசைக் கல்லில் இந்த உருண்டைகளைப் போட்டு (5, 6 உருண்டைகளாகப் போடவும்) சற்று வேகவிட்டு எடுக்கவும்.


இட்டாலியன் நட்பால்ஸ் ரெடி! இது சாப்பிட மிக ருசியாக இருக்கும். இது இத்தாலி நாட்டின் பிரபலமான இனிப்பாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக