உலகின் முதல் அஞ்சலகத் தபால் தலை
1840 ஆம் ஆண்டு மே 6ம் நாள் ‘தி பென்னி ப்ளேக்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் செப்டம்பர் 1854 இல் ஒரு அணா, ராணி விக்டோரியா தலையுடன் கூடிய இரண்டு
அணா, நான்கு அணா மதிப்புள்ள ஸ்டாம்புகள் வெளியிடப்பட்டன.
மோட்டார் மேட்டர்
இன்று சாலைகளில் விதவிதமான
வடிவமைப்புடன் பறக்கின்றன மோட்டார் சைக்கிள்கள். முதன் முதலாக ஜெர்மனியிலுள்ள
காண்டாஸ்ட் என்ற நகரைச் சேர்ந்த கோட்லிப் டெய்ம்லர் என்பவரால் 1885 ஆம் வருடம்
மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப் பட்டது. அதன் பின் இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட்
பட்லர் என்பவர் 1888ஆம் ஆண்டு ஒழுங்கான அழகிய வடிவமுள்ள மோட்டார் சைக்கிளை
உருவாக்கினார். 1889ஆம் வருடம் அவரது மனைவி முதன் முதலாக அம்மோட்டர் சைக்கிளை
இயக்கினார். அவரே உலகில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையைப்
பெற்றார். 1894ஆம் ஆண்டு மியூனிச் நகரில் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும்
தொழிற்சாலை உருவாக்கப் பட்டது. 1900ஆம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த வெர்னர் சகோதரர்களால்
தான் தற்போதைய வடிவமைப்புள்ள மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப் பட்டன.
அனஸ்தீஸியா
இன்று அறுவை சிகிச்சையின் போது
கொடுக்கப்படும் ‘அனஸ்தீஸியா’ என்ற மயக்க மருந்து முதன் முதலில் ஜார்ஜியா நகரைச்
சேர்ந்த டாக்டர் க்ராஃபோர்ட் லாங் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. ஜோன்ஸ்
என்பவரின் கழுத்திலிருந்த கட்டியை அறுத்து அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் லாங்,
ஈதரை உபயோகித்துச் செய்தார். அதுதான் முதல் வலியில்லாத அறுவை சிகிச்சை. நடந்த
ஆண்டு 1842 மார்ச் 30ஆம் தேதி. அடுத்து 1884, டிசம்பர் 11ஆம் நாள் கனெக்டிகட்
நகரைச் சேர்ந்த டாக்டர் ஹோராஸ் வெல்ஸ் என்பவரால் அனஸ்தீஸியா மூலம் பல்
பிடுங்கப்பட்டது. இதன் பின் சட்ட ரீதியாக க்ளோரோஃபார்ம் முறையில் பாஸ்டன் நகரைச்
சேர்ந்த டாக்டர் வில்லியம் மார்டன் என்பவர் 1846ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள்
மாஸாசெட்ஸ் ஜெனரல் மருத்துவ மனையில் ஒரு மேஜர் அறுவை சிகிச்சை செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக