Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

தோஷ நிவர்த்தி தலம்


ஞான ஆலயம் பிப்ரவரி-2002 இதழில் வெளியானது



தஞ்சை மாவட்டம் குடந்தை – திருவையாறு சாலையில் உள்ளிக்கடை என்ற ஊரை அடுத்துள்ள, சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் வடகுரங்காடுதுறை என்னும் ஆடுதுறை பெருமாள் கோயில்.

வாலி வழிபட்ட இத்தல இறைவனின் பெயர் ஸ்ரீதயா நிதீஸ்வரர். தேவி ஸ்ரீஜடாமகுட நாயகி. இந்த அம்பாள் மிக சிறந்த வரப்ரசாதி. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சித்தர் மஹாமேருவை மண்ணால் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த புண்ணியத் தலம். சத்ரபதி சிவாஜி பரம்பரையினர் மிக சிரத்தையுடன் வழிபட்டு ஆண் சந்ததியை வாரிசாகப் பெற்ற தலம்.

இந்த அம்மனுக்கு ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மாலை வேளையில், 9 மஞ்சள் கொண்ட மாலை தொடுத்து சார்த்தி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும். அதில் ஒரு மஞ்சளைத் தேய்த்துக் குளித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு நிச்சயம் புத்திரப் பேறு கிடைக்கும். எல்லாப் பிரச்சினையும், கடன் தொல்லைகளையும் நீக்கும். இதனை சித்தர் சத்ய வாக்காக உரைத்துள்ளார். புத்திரப் பேறு, தோஷ நிவர்த்திக்கு இந்த அம்மனின் பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ளலாம்.

மதுரை வீரன் கோயில் பற்றி ஒருவர் விபரம் கேட்டிருந்தார். இதே ஆடுதுறை பெருமாள் கோயிலில் உள்ளே இலுப்பன் தோப்பு என்ற இயற்கை அழகு சூழ்ந்த இடத்தில் மதுரை வீரன் ஆலயம் அமைந்துள்ளது. இது எங்கள் குல தெய்வம். ஆலயம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, மிக அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. குதிரை மீது கத்தியுடன் கோபமாகக் காட்சி தரும் மதுரை வீரனை இங்கு காண முடியாது. அழகான, சாந்தமான முகத்துடன் இரண்ட்டி உயரமே உள்ள மதுரை வீரன், வேண்டும் வரம் தந்து தன்னை வழிபடுவோரை காக்கும் கடவுளாகக் காட்சியளிப்பது விசேஷம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக