Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

இந்த வார துணுக்கு எழுத்தாளர்


இந்த வார துணுக்கு எழுத்தாளர் என்ற தலைப்பில்
கல்கண்டு 25-04-2005 இதழில் வெளியானது.


லகிலேயே அதிக மீன்களை வியாபாரம் செய்யும் நாடு சீனா. இரண்டாமிடம் வகிப்பது நம் இந்திய நாடு. வருடத்திற்கு 130 மில்லியன் டன் அளவுள்ள மீன்கள் உலக மக்களால் உண்ணப்படுகிறது.

செஸ் விளையாட்டு இந்தியாவில்தான் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. செஸ்ஸின் முற்காலப் பெயர் 'அஷ்ட படா', ஷாந்தரஞ்சா' ஆகியவை.

ம் சிறு நீரகங்கள் தினமும் 1500 லிட்டர் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன. நம் ஆயுள் காலத்தில் சராசரியாக சுத்தமாக்கும் ரத்த அளவு 4000000 லிட்டர்கள் (500 பாத் டப் அளவு!) அம்மடியோவ்!

'ராத்தே' என்ற சொல்லுக்கு 'காலியான கை' என்று பொருள்!

பாங்காக் நகரின் தெருக்களில் வாகனங்களுடன் யானைகளும் செல்லும். இதனால் ஒரு மாதத்தில் 20 யானைகள் வாகனங்களில் சிக்கி காயம்டைவதால், தெருக்களில் யானைகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவிலுள்ள காங்கோ பள்ளத்தாக்கு 1,50,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என நம்பப்படுகிறது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள 'ஏயர்ஸ் ராக்' (Ayers Rock)என்ற மலை தினமும் நிறம் மாறும் தன்மை உடையது.

350 எலும்புகளுடன் பிறக்கும் குழந்தையின் உடலில் வளர்ந்த நிலை அடைந்தவுடன் 206 எலும்புகளே உள்ளன. ஒன்றுடன் ஒன்று இணைவதே காரணம்.

மெரிக்கவில் காணப்படும் ஒருவகை தவளைகள் பூனையின் அளவு இருக்கும். இவை இராட்சதத் தவளைகள் எனப்படும்.

1843ம் ஆண்டு வானில் தோன்றிய 'கிரேட் காமெட்' என்ற நட்சத்திரத்தின் வால் 800 மில்லியன் கிலோமீட்டர் நீளமுடையதாக இருந்தது. இதுவே உலகின் மிக நீளமான வால் நட்சத்திரம்.

முதல் மோட்டார் சைக்கிளை வடிவமைத்தவர் 'கோட்லிப் டெய்ம்லர்' என்பவர். ஜெர்மனியிலுள்ள 'கான்ஸ்டாட்' என்ற நகரைச் சேர்ந்தவர். வடிவமைத்த ஆண்டு 1885. 1888ல் எட்வர்ட் பட்லர் என்பவரே தற்கால அமைப்பான மோட்டார் சைக்கிளை உருவாக்கியவர். 1889ம் ஆண்டு திருமதி பட்லர் முதன் முறையாக மோட்டார் சைக்கிள் கற்றுக் கொண்டு ஓட்டியவர். இவரே மோட்டார் சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி.

ஸ்ரேல் நாட்டிலுள்ள 'டெட்ஸீ' (சாக் கடல்) மட்டுமே கடல் மட்டத்தைவிட 1290 அடி கீழே அமைந்துள்ளது.

'பைஜாமா' என்ற சொல் உருவானது பெர்சியன் மொழியிலிருந்து 'பே' என்பதற்கு கால் என்பது பொருள். 'ஜாமா' என்பதற்கு 'மூடிய' என்பது பொருள்.

'்கூல்' என்ற வார்த்தை உருவானது கிரேக்க மொழியிலிருந்து! வேடிக்கை என்னவெனில் ஸ்கூல் என்பதற்கு உண்மையில் ஓய்வு என்பது பொருள்! லத்தீன் மொழியில் இவ்வார்த்தைக்கு விளையாட்டு, ஜோக் என்ற பொருட்களும் உண்டு! எதிலும் கல்வி, படிப்பு என்ற பொருட்கள் இல்லை!

சாப்பிடும் முறைகள்:

கிழக்கு முகமாக அமர்ந்து உண்டால் ஆயுள் அதிகரிக்கும். தெற்கு - புகழ் கிட்டும். மேற்கு -  செல்வம். வடக்கு - சத்தியம் பிறக்கும். திங்கள், புதன், வெள்ளி, சனி, ஆகிய நாட்கள் விருந்துண்ண ஏற்றவை. செவ்வாய், வியாழனில் விருந்துண்டால் பகை ஏற்படும்.

மிஸ். எல்லன் சர்ச் என்ற சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பெண்ணே முதல் விமானப் பணிப் பெண்ணாக பணியில் அமர்த்தப்பட்டவர்.

ந்தியாவின் முதல் தொழிற்சஷ்க வேலை நிறுத்தம் 1862ம் ஆண்டு ஹெளரா ரயில்வே ஊழியர்கள் 1200 பேரால் நடத்தப்பட்டது. இது உலகின் இரண்டாவது வேலை நிறுத்தமாகும். 

லைமுடி ஏறுமதியில் சிறப்பிடம் பெற்றது நம் இந்தியா. அந்தத் தலைமுடி எங்கிருந்து ஏற்றுமதியாகிறது என்கிறீர்களா? ஆந்திராவின் திருப்பதி ஆலயத்திலிருந்துதான்!

சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது நாம் அறிந்ததே. அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா? அவர்கள் தலைமுடியை வெட்டுவதில்லை. தலைப்பாகைக்கென விற்கும் தனிப்பட்ட நீண்ட துண்டுகளிலேயே அவற்றைச் செய்து தம் தலையில் அணிவார்கள். அத்தலைப்பாகை மிக உயர்ந்த மரியாதைக்குரிய மதச் சின்னமாகப் போற்றப்படுகிறது. இறைவன் அளித்த பரிசான தலை முடியை வெட்டி அழகு படுத்துவது சீக்கிய மதக் குறிப்புகளின் படி குற்றமாகும். தலைப்பாகையை எடுத்து அதற்குரிய இடத்திலேயே வைப்பர். அது கீழே விழுந்தாலோ, கால் பட்டாலோ அபசகுனமாகக் கருதுவர். அதற்கு மரியாதை தரும் நிமித்தமாகவே, அவர்கள் ஸ்கூட்டர், பைக்குகளில் செல்லும்போது ஹெல்மெட் உபயோகிப்பது கிடையாது. உண்மையான சீக்கியனின் உடலில் ஐந்து பொருட்கள் (ஐந்து K) இருக்க வேண்டியது மிக அவசியம். அவை: 1. கேஸ் (தலைமுடி) 2. கங்கா (சீப்பு) 3. கடா (இரும்பு வளையம்) 4. கிர்பான் (சிறுகத்தி) 5. கச்சா (ஐட்டி). இவை தீய எண்ணங்களான காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம் இவைகளை நீக்கி ஒரு சீக்கியன் வாழ வேண்டும் என்பதைக் குறிப்பதாக சீக்கிய மத நூல் உரைக்கிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக