Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

காருக்கு பெட்ரோல் மனிதனுக்கு காப்பி

 
கல்கண்டு 20.07.2005 இதழில் வெளியானது




பட்டாசுகளை முதலில் உருவாக்கி வெடித்தவர்கள் சீனர்களே. முதலில் கொண்டாட்டங்களுக்கு வெடித்து மகிழ்ந்தவர்கள், பின் அவற்றின் மூலம் அம்புகளைச் செலுத்தி சுட ஆரம்பித்தனர். ராணுவத் தேவைக்கான ராக்கெட்டுகளை முதலில் செலுத்தியவர்களும் சீனர்களே!

உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் வாணிபப் பொருள் பெட்ரோல். இரண்டாம் இடம் காபிக்கு!

யானை தன் துதிக்கையில் இரண்டு காலன் (gallon) தண்ணீரை நிரப்பிக் கொள்ளும்.

சுறா மீன்களின் முட்டைகளே மிகப் பெரியவை.

நட்சத்திர மீன்களுக்கு அந்த நட்சத்திரங்களின் ஒவ்வொரு கூரான முனையிலும் கண்கள் உண்டு.

நூற்றாண்டு மரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அந்த மரத்தில் நூறு ஆண்டுகட்கு ஒரு முறையே பூக்கள் தோன்றும். இம்மரம் பெங்களூரில் லால் பாக்கில் உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக