ஆலயம் டிசம்பர், 2003 இதழில் கேட்கப்பட்ட கேள்வி
தெய்வங்களைப்
பூஜிக்க வாசனையுள்ள மலர்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? எங்கள் ஊரில் அநேக
கோயிலகளில் அர்ச்சனைக்கு துலுக்க சாமந்தியையே பயன்படுத்துகிறார்கள். இது
தவறில்லையா?
எந்த ஊரில் எந்த புஷ்பம்
கிடைக்கிறதோ அதை வைத்து அப்பொழுது பூஜை செய்யலாம்; தவறில்லை. ஸ்ரீராமர் தன் தந்தை
தசரதர் ஸ்வர்க்கம் சென்றதும், காட்டில் இருந்த புங்க மரத்தின் காய்களைக்
கொண்டுதான் தசரதருக்கு பிண்டம் வைத்தார் என்று வால்மீகி இராமயணத்தில்
கூறப்பட்டுள்ளது. தண்டகாரண்யத்தில் அதுதான் கிடைத்தது என்பதினால் அதைக் கொண்டு
செய்தார். அதே போல் எந்த இடத்தில் என்ன புஷ்பம் கிடைக்கிறதோ, அதைக் கொண்டு
பக்தியுடன் பூஜிக்க வேண்டும்.
வெளியான கேள்வி: முன்னேறும் இளைஞன் எப்படியிருக்க வேண்டும்?
பதில்: பாதை எதுவானாலும் பாதங்கள் அவனுடையவை. என்வே அவற்றைப் பார்த்து
அடியெடுத்து வைக்க வேண்டும். பார்த்து வைத்தால் சிகரம்! பார்க்காமல் வைத்தால்
பள்ளத்தாக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக