Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

பெண்ணின் முதல் எதிரி பெண்ணா? ஆணா?

மங்கை அக்டோபர் 1994 இதழில் வெளியானது



பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் தாயே ‘சே, பெண்ணாகப் பிறந்து விட்டதே’ என்று அலுத்துக் கொள்கிறாள்.

அடுத்து... அப்பெண் வளரும்போது ஆண் குழந்தைகளுக்கு உள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் தாய் அவளுக்குத் தருவதில்லை. என்றைக்கும் அவளை வேறு வீட்டிற்கு வாழப் போகிறவள் என்ற நினைவிலேயே மிக்க கட்டுப்பாட்டோடு வளர்க்கிறாள்.

அவளது திறமைகளும், சாதனை எண்ணங்களும் அவளது தாய், பாட்டி போன்ற பெண்களால் கிள்ளி எறியப்பட்டு, கல்யாணச் சந்தைக்குத் தயாராகிறாள். அங்கு பலி ஆடு போல் நிறுத்தப்பட்டு, மணமகளின் தாய் என்ற பெண்ணால் பேரம் பேசப்படுகிறாள்.

திருமணத்திற்குப் பின் தன்னைப்போல் அவளும் ஒரு பெண் என்று நினைக்காத மாமியாராலும், நாத்தனாராலும் பலவித துன்புறுத்தல்கள்...

அந்தப் பெண் வேலைக்குச் சென்று அனைவருடனும் சரிசமமாகப் பழகினாலோ, சக தோழிகளிடமிருந்து அவளுக்கு விமரிசன அம்புகள்...


பெண்களின் உயர்வில் ஒரு ஆண் என்றும் பொறாமை அடைவதில்லை. தன் மனைவி என்று பெருமையே அடைகிறான். அவளை உயர விடாமல் பேச்சுக்களாலும், செயல்களாலும் கேவலப்படுத்துவது அவளுடனேயே இருக்கும் பெண்கள்தான்.


2 கருத்துகள்: