Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

கணபதியின் 32 உருவங்கள்


லேடீஸ் ஸ்பெஷல் – ஆகஸ்டு 2003 இதழில் வெளியானது
பால கணபதி
சிவப்பு நிறத்துடன் நான்கு கரங்களுடன் விளங்குபவர்.
தருண விநாயகர்
சிவப்பு வண்ண நான்கு கரங்கள் கொண்ட கணபதி.
பக்தி விநாயகர்
சாம்பல் நிறமும் நான்கு கரங்களும் கொண்டவர்.
வீர கணபதி
சிவப்பு வண்ணம், 16 கரங்கள் கொண்டவர்.
சக்தி கணபதி
சிவப்பு வண்ணத்தில், இடப்பக்கம் மனைவியுடன் நான்கு கரங்களுடன் விளங்குபவர்.
த்விஜ கணபதி
வெண்மை நிறத்துடன் நான்கு முகங்களும், நான்கு கரங்களும் கொண்டவர்.
சித்தி விநாயகர்
பொன் நிறமும், நான்கு கரங்களும் கொண்டவர்.
உச்சிஷ்ட கணபதி
நீல வண்ணத்தில், ஆறு கரங்களுடன் மனைவியுடன் காட்சி தருபவர்.
விக்ன விநாயகர்
தங்க நிறமும், எட்டு கைகளும் உடையவர்.
க்ஷிப்ர கணபதி
செந்நிறத்துடனும், நான்கு கரங்களுடனும் ரத்ன கும்பத்துடன் விளங்குபவர்.
ஹேரம்ப கணபதி
கருமை நிறத்துடன், பத்து கரங்களும், ஐந்து முகங்களும் கொண்டு சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பவர்.
லக்ஷ்மி கணபதி
வெண்ணிறமும் எட்டு கைகளும் கொண்டு இரு மனைவியருடன் காட்சி தருபவர்.
மகர கணபதி
செந்நிறம், பத்து கைகள், நெற்றிக் கண்ணுடன் ரத்ன கும்பம் தாங்கி, மனைவியருடன் காட்சி அளிப்பவர்.
விஜய விநாயகர்
செந்நிறத்தில், நான்கு கரங்களுடன், மூஷிக வாகனத்தில் காட்சி தருபவர்.
ந்ருத்த விநாயகர்
பொன் நிறமுடைய கணபதி, நடனமாடும் நிலையில் உள்ளார்.
ஊர்த்வ விநாயகர்
பொன் நிறமும், ஆறு கரங்களும் கொண்டு மனைவியுடன் காட்சி தருபவர்.
ஏகாக்க்ஷர விநாயகர்
செந்நிறத்துடன் மூன்றாவது கண்ணுடன் தாமரை மலரில் அமர்ந்திருப்பவர்.
வர கணபதி
செந்நிறமும், முக்கண்ணும், நான்கு கரங்களும் கொண்டவர்.
த்ரயாக்க்ஷர கணபதி
பொன் நிறம், நான்கு கரங்கள், சாமர கர்ணத்துடன் விளங்குபவர்.
க்ஷிப்ர ப்ரசாத கணபதி
சிவந்த வண்ணமும் ஆறு கரங்களும் உடையவர்.
ஹரித்ரா கணபதி
மஞ்சள் நிறம், நான்கு கரம் கொண்டவர்.
ஏகதந்த விநாயகர்
நீல வண்ணம், நான்கு கரங்களுடன் காட்சி தருபவர்.
சிருஷ்டி விநாயகர்
சென்னிறமும், நான்கு கரங்களும் கொண்டு மூஷிக வாகனத்தில் அமர்ந்திருப்பவர்.
உத்தண்ட விநாயகர்
சிவந்த வண்ணம், பத்து கைகளுடன், இடப்பக்கம் மனைவியுடன் காட்சி தருபவர்.
ரணமோசன விநாயகர்
பளிங்கு வண்ண, நான்கு கரங்களுடையவர்.
துண்டி விநாயகர்
நான்கு கரங்களுடைய கணபதி, தந்தத்துடனும், மாலை, கோடரி மற்றும் முத்துக்கள் பதித்த பாத்திரத்துடன் காட்சி தருபவர்.
த்விமுக விநாயகர்
செந்நிறம், நான்கு கரங்கள், இரண்டு முகம் கொண்டவர்.
த்ரிமுக விநாயகர்
செந்நிறம், மூன்று முகங்கள், ஆறு கைகள் கொண்டு தாமரை மலரில் வீற்றிருப்பவர்.
சிம்ஹ விநாயகர்
வெண்மை நிறம், எட்டு கைகள் உடையவர். அதில் ஒரு கை சிங்க முகமுடையது.
யோக விநாயகர்
செந்நிறம் கொண்ட இவர், யோக நிலையில் இருப்பவர்.
துர்கா விநாயகர்
செந்நிறம், எட்டு கைகள் உடையவர்.
சங்கடஹர விநாயகர்
செந்நிறம், நான்கு கைகள், நீல வண்ண உடை உடுத்தி, தாமரை மலரில் மணைவியுடன் அமர்ந்திருப்பவர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக