Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

கம்புலாடு

சுமங்கலி 1985 இதழில் வெளியானது



தேவையானவை:

கம்பு - ¼ கிலோ
சர்க்கரை - ½ கிலோ
ஏலக்காய் – 10
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
நெய் – 150 கிராம்
பச்சைக் கற்பூரம் – சிறிது

செய்முறை:

கம்பை நன்கு சுத்தம் செய்து நீரில் ஊறவைத்து மறுநாள் ஒரு துணியில் நீரில்லாமல் கட்டி வைக்கவும். அதற்கு மறு நாள் பார்த்தால் கம்பில் முளை வந்திருக்கும். அதை வெயிலில் நன்றாக காயவைத்து மிஷினில் நைஸாக அரைத்து, கம்பு மாவுடன் நன்கு கலக்கவும்.


முந்திரியை நெய்யில் வறுத்துப் போடவும். ஏலக்காய், பச்சைக் கற்பூரத்தைப் பொடி செய்து போடவும். நெய்யைச் சுடவைத்து இந்த மாவில் ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும். மிகவும் சுலபமாகச் செய்யும் இந்த லட்டை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சத்தும் நிறைந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக