Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

என் குழந்தைகள்



சுமங்கலி 1991 இதழில் வெளியானது





எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணேஷ், எல்.கே.ஜி முதல் இதுவரை எல்லா வகுப்பிலும் முதல் மாணவனுக்கான பரிசைப் பெற்று வருகிறன். பள்ளிகளில் நடைபெறும், மற்றும் வெளியிடங்களில் நடக்கும் எல்லாப் போட்டிகளிலும் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டி, கையெழுத்துப் போட்டி இப்படி எல்லாப் போட்டிகளிலும் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளான்.

இந்தியில் ப்ரவீண் வரை முடித்துள்ளான். மிருதங்கம் வாசிக்கத் தெரியும். திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளான்.

கரூரில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் விஷ்ணு ஸஹஸ்ர நாமப் போட்டியில் தவறாது கலந்து கொண்டு முதல், மூன்றாம் பரிசுகளைப் பெற்றுள்ளான்.

பழைய துணி, கிழிந்த காகிதம், பறவை இறக்கைகள், முட்டை ஓடு, காலியான பிஸ்கட் பாக்கெட், சோப் டப்பாக்கள் இவை அவன் கையில் கிடைத்தால் அழகான கைவினைப் பொருளாக மாறிவிடும். இதற்கென நடந்த பல போட்டிகளில், பள்ளி சார்பில் கலந்து கொண்டு, பரிசுகள் பெற்றுள்ளான்.

தற்போது படித்து வரும் ‘டால்பின் பள்ளியில்’ பள்ளியின் சிறந்த மாணவனுக்கான வெள்ளிப் பதக்கத்தை கடந்த இரு வருடங்களாகப் பெற்று வருகிறான். மேலும், சிறந்த மாணவனுக்காக ‘பாம்பே டையிங்’ நிறுவனத்தாரின் சிறப்புப் பரிசாக ரூ. 250 பெற்றுள்ளான்.

‘சின்மயா மிஷின்’ நட்த்திய பகவத் கீதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளான். இது தவிர, ஸ்கௌட்ஸ், இன்ட்ராக்ட் இவற்றில் பங்கு பெற்று பொதுச் சேவை செய்வதிலும் ஆர்வமுள்ளவன்.

Indian Express - May 1998





சாதிக்கப் பிறந்தவர்கள்
ராஜம் ஜூலை 1994 இதழில் வெளியானது



பா.கண்ணன்
பாரதி வித்யா பவன் பள்ளி
12-ம் வகுப்பு
ஈரோடு

இவர் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1164 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட முதல் மாணவனாகத் தேறியுள்ளார். கம்ப்யூட்டர், கணிதம் இரண்டிலும் 200 மதிபெண்களும், சமஸ்கிருதத்தில் 196 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாவது மாணவனாகத் தேறியுள்ளார். பள்ளிப் படிப்பு தவிர இந்தி ப்ரவீண் பரீட்சையிலும், டைப்ரைட்டிங் ஆகிய இரண்டிலும் முதல் வகுப்பில் தேறியுள்ளார். மற்றும் கட்டுரை, மாறுவேடப் போட்டி, திருப்பாவை, விஷ்ணு ஸஹஸ்ர நாமப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளார். பி.ஈ. படித்து இஞ்சினியராகி மேற்படிப்பிற்கு வெளி நாடு சென்று படித்தாலும் தன் திறமையை நம் நாட்டின் முன்னேற்றத்திற்கே பயன் படுத்துவேன் என்கிறார்.









                                    

















என் இரண்டாவது மகன் கணேஷ் வாங்கிய பரிசுகள், பாராட்டுகள் மற்றும் வெற்றிகள்
















 





































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக