என் இரண்டாவது மகன், பத்தாம்
வகுப்பு படிக்கும் சமயம், ஒரு நாள் முழங்காலில் வலிக்கிறது என்றான். ஏதோ சுளுக்காக
இருக்குமென்று ஆயிண்ட்மெண்ட் தடவி, மாத்திரை கொடுத்தேன். அதன் பின்னரும் அவனுக்கு
வலி அதிகமாயிற்றே தவிர குறையவில்லை; காலை துளியும் அசைக்க முடியாமல் கஷ்டப்பட்டான்.
நிற்க கூட முடியாமல் தவித்தான். உடன் டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். அவரும்
டெஸ்ட் எல்லாம் செய்து மாத்திரைகள் கொடுத்து, ஊசி போட்டார். அதற்குப் பிறகும்
எந்தப் பயனும் இல்லை. வலி குறையவே இல்லை. பத்தாம் வகுப்பு என்பதால் பள்ளிக்கு
விடுமுறை எடுக்கவும் முடியவில்லை.
ருமாடிசமாக இருக்குமோ என்று
பயமாகிவிட, ஒரு சிறந்த எலும்பு சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரிடம் காட்டினேன்.
அவரோ எல்லாம் நார்மல் என்று சொல்லி விட்டார். வலி எதனால் என்றும் கண்டு பிடிக்க
முடியவில்லை. அவன் படும் கஷ்டத்தைப் பார்த்து எனக்கு மனம் கலங்கி விட்டது.
சட்டென்று ஏழு மலையானை நினைத்துக் கொண்டு, “ப்கவானே, என் மகன் காலை சரியாக்கு.
நான் நடந்து உன் ஆலயம் வருகிறேன்!” என்று வேண்டிக் கொண்டேண். என்ன ஆச்சரியம்!
அடுத்த இரண்டு நாலில் என் மகன் முழங்கால் வலி சரியாகி பழையபடி ஆகிவிட்டான். அந்த
பெருமாளின் கருணை என்னை மெய் சிலிர்க்க வைத்தது. எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல்
என்னெவென்று தெரியாமல் இருந்த முழங்கால் வலியை சரியாக்கியது என் அப்பன்
ஏழுமலையான்தான் என்பதில் சந்தேகமில்லை. பின்னர், வேண்டிக் கொண்டபடி பிரார்த்தனையை
நிறைவேற்றினேன். இன்றும் இடர் வரும் சமயம் நான் இரு கை கூப்பி இறைஞ்சுவது அந்த
திருமகன் நாயகன் திருவேங்கடமுடையானைத்தான்! இது போன்ற பலமுறை அவனருளை
உணர்ந்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக