நான்கைந்து வருடங்களுக்கு முன்,
அச்சமயம் நாங்கள் தஞ்சை அருகிலுள்ள பாபநாசத்தில் இருந்தோம். ஒரு நாள் இரவு எட்டு
மணிக்கு இளைஞன் ஒருவன் வந்தான். தான் கேரளாவிலுள்ள மூணாற்றில் இருப்பதாகவும், தன்
அண்ணன் என் கணவர் பணிபுரியும் வங்கியில், அங்குள்ள கிளையில் பணிபுரிவதாகவும், அவன்
அண்ணன் பெயர் முதலிய விபரங்களும் கூறினான். தான் ஏதோ வேலையாக இந்த ஊர்ப்பக்கம்
வந்ததாகவும், வைத்திருந்த பணம் முழுவதும் பிக்பாக்கெட்டில் போய் விட்ட்தால், ஊர்
திரும்பிச் செல்ல பணம் தரும்படியும் கேட்டான். சுபாவமாகவே இளகிய மனம் கொண்ட என்
கணவரோ உடனே சற்றும் யோசியாது ‘நூறு ரூபாய் போதுமா?’ என்றபடியே பணத்தைக்
கொடுத்துவிட்டார். அந்தப் பையனும் தான் போனதும் உடனே பணத்தை மணியார்டர் செய்து
விடுவதாகவும், சந்தேகமானால் தன் அண்ணனுக்கு ஃபோன் செய்து விசாரித்துக்
கொள்ளும்படியும் கூறிச் சென்று விட்டான். ஊஹூம்! பணமும் வரவில்லை. அவன் சொன்ன
மாதிரி அந்த வங்கியிலும் யாரும் இல்லை என்பது தெரிந்தபோது, அந்தப் பையன் எவ்வளவு
அழகாக எங்களை ஏமாற்றியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக