Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

எந்தக் குழந்தையும்...

கிருஹ ஷோபா ஏப்ரல் 2002 இதழில் வெளியானது


குழந்தைகள் பூமியின் நடமாடும் சொர்க்கங்கள். மழலையாய்ப் பிறந்து, அன்னையின் மடியிலே தவழ்ந்து, அவர்கள் வளரும் வேளையில் பெற்றோரின் முழு கவனமும் பிள்ளைகள் மீதே இருக்க வேண்டும்.

பெற்றோரே குழந்தைகளின் ‘ரோல் மாடல்கள்’ என்பதால் பிள்ளைகளின் எதிரில் சண்டையிடுவதோ, பொய் பேசுவதோ, தவறுகளை மறைப்பதோ கூடாது.

உன்னால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என்றோ அல்லது முழந்தை செய்த தவறை அடிக்கடி சுட்டிக் காட்டியோ அல்லது மற்ற பிள்ளைகளுடன் அவர்களை ஒப்பிட்டுப் பேசியோ அவர்களை நோகடிக்கக்கூடாது.

எந்தச் சூழ்னிலையிலும் வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரியவையுங்கள்.

அன்போடும், பணிவோடும், பொறுமையோடும் வாழ வேண்டும் என்றும், பொறுமையோடும் வாழ வேண்டும் என்றூம், பொறுமையே வெற்றிக் கனியைப் பறித்துத் தரும் ஆயுதம் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

குழந்தைகள் படிப்பிலோ, விளையாடிலோ பரிசுகள் வாண்கினால் அவர்களைப் பாராட்டி பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்து அவர்களை ஊக்குவியுங்கள்.

குழந்தைகளிடம் காட்டும் அதிகமான கண்டிப்பு அவரகளை தவறான வழிக்கு அழைத்துச் செல்லும். அதே போல் அதிகமான செல்லமும் அவர்களிடம் பிடிவாத குணத்தை வளர்த்து எதிர்காலத்தில் முரட்டு சுபாவத்தை ஏற்படுத்தும்.

உங்கள் விருப்பங்களை குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள். கணக்கில் ஆர்வமற்ற பிள்ளைகளை எஞ்சினியர் ஆக்கும் முயற்சியில் இறங்காதீர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக