‘அஷ்ட விநாயக் யாத்ரா’
பற்றிய சில குறிப்புகள்
கணேச, முத்கல புராணாங்களில் மிகச்
சிறப்பாக, வாழ்வில் ஒருமுறை ஒவ்வொருவரும் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய யாத்திரையாக
‘அஷ்ட விநாயக யாத்ரா’ பற்றி கூறப்பட்டுள்ளது.
மோர்காவ்ன், மயூரேஷ்வர், சித்தடேக்
சித்தி விநாயக், பாலி பல்லாலேஷ்வர், மஹத் வரத விநாயகர், தேவூர் சிந்தாமணி
விநாயகர், லேன்யாத்ரி கிரிஜாத்மஜர், ஓஸார் விக்னேஷ்வர், ராஞ்சன் காவ்ன் மகாகணபதி
என்ற வரிசையில் தரிசித்த பின், இறுதியாக மீண்டும் மோர்காவ்ன் சென்று யாத்திரையை
முடிக்க வேண்டும் என்பது புராணக் குறிப்பு. ஆனால் தற்காலத்தில் நேரம், ஒவ்வொரு
தலத்திற்கும் இடைப்பட்ட தூரம் இவற்றைப் பொறுத்து மாறுபட்ட முறையில் இந்த யாத்திரை
மேற்கொள்ளப்படுகிறது.
பூனா மற்றும் மும்பையிலிருந்து
இந்த யாத்திரைக்கென தனிப்பட்ட மற்றும் அரசுப் பேருந்துகள் நிறைய உள்ளன.
மும்பையிலிருந்து வெள்ளிக்கிழமை
காலை புறப்படும் பேருந்து ஞாயிறு அன்று மாலை திரும்ப மும்பை வந்து சேரும்.
சாதாரணப் பேருந்தில் கட்டணம் 1600 ருபாய். குளிர் சாதன வசதியுள்ள பேருந்துகளும்
உண்டு. மொத்தத்தில் மனதிற்கு அமைதியும், நிம்மதியும் தரும் இந்த யாத்திரை பற்றி
ஞான ஆலய வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வசதியும்
வாய்ப்பும் உள்ளவர்கள் வாழ் நாளில் ஒருமுறை அவசியம் இந்த யாத்திரை மேற்கொள்வது
புண்ணியம் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக