ஞான
ஆலயம் மே, 2003 இதழில் வெளியானது
விநாயகப் பெருமான் உலகம்
முழுவதிலும் உள்ள இந்துக்களின் பொதுவான கடவுள் எனினும் மகாராஷ்டிரத்தின் செல்லப்
பிள்ளை எனலாம். இம்மாநில மக்களின் கணபதி பக்தி மிகத் தீவிரமானது. ஒவ்வொரு சங்கடஹர
சதுர்த்தி அன்றும் சிறு வயது கழந்தைகள் முதல் விரதமிருந்து, இரவு சந்திரனைப்
பார்த்த பின்பே உணவு உண்பர். ‘அங்காரக சதுர்த்தி’ எனப்படும் செவ்வாய்க் கிழமை
அன்று வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று சிறிய பிள்ளையார் கோவில்களில் கூட நீண்ட
வரிசை இருக்கும்.
பிள்ளையார் சதுர்த்தி இங்கு பத்து
நாட்கள் ஊரே விழாக்கோலம் பூண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ‘கணபதி பப்பா
மோரியா’; ‘மங்கள மூர்த்தி மோரியா’ என்ற கோஷங்கள் சதா ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இதனால்தான் கணபதி தனக்கு எத்தனையோ பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உலகெங்கும்
இருப்பினும், மிகப் பழமையானதும், புராணச் சிறப்பு பெற்றதும், சுயம்புவாகத்
தோன்றியதுமான ‘அஷ்ட விநாயக’த் தலங்களை மகாராஷ்டிரத்திலேயே அமைத்துக் கொண்டார்
போலும்.
இம்மை, மறுமை இன்பங்களைத் தரும்
இந்த அஷ்ட விநாயகர் தலங்களின் சிறப்பு கணேச புராணம், முத்தல புராணாங்களில் விரிவாக
உள்ளது. இதலங்களை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டுமென கணேச புராணம்
உரைக்கிறது. பழமையான இவ்வாலயங்கள் இன்று புதுப்பிக்கப் பட்டிருந்தாலும், அவற்றின்
ஆகர்ஷண சக்தியும், ஈர்ப்பும் நம்மை மெய்மறந்து இறைவனுடன் ஐக்கியப் படுத்தும்
அற்புத தெய்வீக அனுபவத்தைத் தருகிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான கணேசருக்கு
விருப்பமான அஷ்ட விநாயகத் தலங்களான:
ஸ்வஸ்தி ஸ்ரீகண
நாயகம் கஜமுகம்
மோரேஷ்வரம்
ஸித்திதம் |
பல்லாலம் முருடம் வி
நாயகம்
மதம்சிந்தாமணி
தேவாரம் ||
லேன்யாத்ரி
கிரிஜாத்மகம் ஸவர்தம்
விக்னேஸ்வரம் ஓஜரம்
|
க்ராமே ராஞ்சன்
ஸன்ஸ்தித் கணபதி
கூர்யாத் ஸதா
மங்களம் ||
அஷ்ட விநாயகத் தலங்களைக்
குறிக்கும் மேலே உள்ள மங்களாஷ்டக சுலோகப்படி அதலங்கள் அமைந்துள்ள இடங்கள்:
1. ‘மஹத்’தில் உள்ள
ஸ்ரீவரத விநாயகர்.
2. ‘பாலி’யிலுள்ள
ஸ்ரீவல்லாலெசுவரர்.
3. ‘ரஞ்சன்
காவ்’விலுள்ள ஸ்ரீமகாகணபதி.
4. ‘மோர்காவ்’விலுள்ள
ஸ்ரீமயூரேஷ்வரர்.
5. ‘சித்தடேக்’கிலுள்ள
ஸ்ரீசித்தி விநாயகர்.
6. ‘தேவூரி’லுள்ளா
ஸ்ரீசிந்தாமணி விநாயகர்.
7. ‘லேன்யாத்ரி
மலை’யிலுள்ள ஸ்ரீ கிரிஜாத்மஜர்.
8. ‘ஓஸாரி’லுள்ள
ஸ்ரீவிக்னேஷ்வர்.
இவ்வனைத்து ஆலயங்களும் பூனாவைச்
சுற்றி அமைந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக