Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

செல்போன் செல்லக்குட்டி


மங்கையர் மலர் ஏப்ரல், 2004 இதழில் வெளியான கட்டுரை



மொபைல் ஃபோன் இது இன்றைய அதி நவீன உலகில் அத்தனை பேரையும் தன் ஆதிக்கத்தில் ஆட்டி வைக்கும் ஒரு கையடக்க விஞ்ஞான சாதனை! பத்தாம் வகுப்பு மாணவர் முதல் மிகப் பெரிய பிஸினஸ்மேன் வரை, ஆட்டோ ஓட்டுனர் முதல் ஆகாசத்தில் பறக்கும் பைலட் வரை – மொபலை ஒரு செல்லக் குட்டி மாதிரி தூக்கிக் கொண்டு அலைகிறார்கள். மொபைல் கையில் இருந்தால் உலகே நம் வசந்தான்! ஈமெயில் அனுப்பலாம். பொழுது போகாவிட்டால் விளையாடலாம். ஏன் சினிமா கூடப் பார்க்கலாம்! அந்த மொபைலை சரியானபடி பராமரிப்பதும் மிக அவசியம். அதற்கான சில டிப்ஸ் இவை:
Ø மொபைல் ஃபோனை ஈரக்கையால் தொடக்கூடாது. தண்ணீர் படும் இடங்களில் வைப்பதோ, மழையில் நனைப்பதோ கூடாது. அப்படி தண்ணீர் பட்டு விட்டால் உடனே ஆஃப் செய்து விட்டு நன்கு உலர விடவும். ஈரத்தால் உள்ளே இருக்கும் இயந்திர பாகங்கள் பழுதடைந்தால், உபயோகத் திறன் குறைந்து விடும்.

Ø மொபைலை கீழே போடக் கூடாது. மேல் பாகமும், உள் பாகங்களும் விரிசலடைந்தால், சரியாகக் கேட்காது. கையில் வைத்துக் கொள்வதைத் தவிர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பாக்கெட்டிலோ, இடுப்பு பெல்ட்டிலோ வைத்துக் கொள்வதே நல்லது.


Ø ப்ரீஃப்கேஸ் மற்றும் ஹேண்ட்பாகில் வைத்தால் மற்ற சாமான்களுடன் உராய்ந்து வீணாகி விடும். மொபைல் வாங்கியவுடன் அதற்குச் சரியான உறையை வாங்கி அதில் வைக்கவும்.

Ø அதிக வெப்பம், அதிக குளிர்ச்சி இவற்றால் செல்ஃபோனிலுள்ள பாட்டரிகள் பாதிக்கப்படும். விறைவில் வீணாகிவிட வாய்ப்புண்டு.


Ø ஃபோனிலுள்ள பாட்டரி முழுதும் சார்ஜான பின்பு அதை சார்ஜிலிருந்து எடுத்துவிட வேண்டும். அதற்கு மேலும் சார்ஜ் செய்தால் அதிக வெப்பத்தால் பாட்டரி வீணாவதுடன், உள் பாகங்கள் உருகவும் வாய்ப்புண்டு.

Ø மொபைலைவிட அதனுள்ளிருக்கும் பாட்டரிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது.


Ø பாட்டரிகளை எடுக்கும் போதும், போடும்போதும் எதன் மேலும் இடிப்பதோ, கீழே போடுவதோ கூடாது. அதிலுள்ள ஃபோன் மற்றும் பாட்டரிகளை  இணைக்கும் உலோகத் தொடர்புடைய தகடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும்.

Ø பாட்டரிகளை எடுக்குமுன் மொபைலை அணைத்து விடவும். பலர் இதுபோல் செய்வதில்லை. இதனால் பாட்டரியின் சக்தி குறைந்து விடும்.


Ø பாட்டரிகளை சூரிய வெளிச்சம் நேரடியாகப் படும் இடங்களில் வைக்கக் கூடாது.

Ø நிக்கல் மெட்டல் ஹைட்ரைட் (NIMH), லித்தியம் இயான் (Li ion) பேட்டரிகள் நல்ல தரம் வாய்ந்தவை. இவையே நவீன மொபைல் ஃபோன்களில் உபயோகிக்கப்படுபவை. நிக்கல் காட்மியம் பாட்டரிகள் சரியானபடி ரீசார்ஜ் செய்யப் படாவிட்டால் விரைவில் வீணாகி விடும்.


Ø எப்பொழுதும் மொபைல் ஃபோனில் ஒரிஜினல் பாட்டரிகளையே பயன்படுத்துவது நீண்ட நாள் உழைப்பைத் தரும்.

Ø பல மொபைல்களில் சார்ஜ் குறைந்ததும், ஒரு ‘பீப்’ சத்தம் ஏற்பட்டு, ரீசார்ஜ் செய்ய வேண்டியதை நினைவுறுத்தும். உடன் ரீசார்ஜ் செய்ய முடியாத போது மொபைலை ஜீரோ ரிங் வேல்யூம், ஜீரோ பேக்லைட், நான் வைபரேஷன் மோடில் வைத்து விட வேண்டும்.


Ø புதிய மொபைல் வாங்கும்போது முழுவதுமாக சார்ஜ் ஆகியிருக்காது. அதன் உபயோகிக்கும் முறயில் கண்டபடி குறைந்த பட்சம் 14 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டியது அவசியம். 2 அல்லது 3 மணி நேரத்தில் சார்ஜ் ஆகி விட்டதாக அறிவிப்பு வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சார்ஜ் செய்யலாம்.

Ø பாட்டரிகளை ஸ்கூட்டர் சாவி போன்ற இரும்புச் சாமான்களுடன் வைப்பது கூடாது.


Ø நெருப்பின் அருகில் வைக்கக் கூடாது.

Ø பாட்டரியை நாமே பிரித்து சேர்ப்பது கூடாது.


Ø பாட்டரி சரியாக வேலை செய்யவில்லை என்று தோன்றினால் அதற்குரிய தகுதி பெற்ற டீலரிடம் கொண்டு சரி செய்யவும்.

Ø பாட்டரியை உபயோகிக்காமல் சில மாதங்கள் வைத்திருந்தால் அது செயலிழந்து விடும்.


Ø தரமான, நம்பகமான பாட்டரிகளையே உபயோகியுங்கள்.

Ø மொபைல் வாங்கியவுடன் கஸ்டமர் சர்வீஸில் பதிவு செய்யவும். அவர்கள் உங்கள் IMEI எண்ணையும், SIM எண்ணையும் ரெகார்டு செய்து வைத்து விடுவர். இதனால் ஃபோன் தொலைந்தாலோ, திருடு போனாலோ அவர்களுக்கு அறிவித்தால், அவர்கள் அந்த SIM நம்பரை அடுத்தவர் பேச முடியாமல் ப்ளாக் செய்து விடுவர்.


Ø 15 இலக்கமுள்ள ஒவ்வொரு மொபைலுக்குமான தனிப்பட்ட IMEI எண் ஒரு ஸ்டிக்கரில் குறிக்கப்பட்டு பாட்டரியின் கீழ்ப்பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும். உங்கள் மொபைலில் #06# என்ற குறியீடுகளை அழுத்தி அந்த எண்ணை திரையில் காணலாம்.

Ø மொபைல் உபயோகத்தில் இல்லாதபோது ஹேண்ட் பேக் அல்லது சட்டைப் பையில் வைக்கவும். ரயில், பஸ் பிரயாணத்தின் போது கையில் வைத்திருந்தால் தவறி கீழே விழ வாய்ப்புண்டு.


Ø மும்முரமாக ஷாப்பிங் செய்யும் போது, கவுண்டரில் பணம் எடுக்கும் போது, மொபைலைக் கீழே வைக்காதீர்கள். மறந்து விடவும், அடுத்தவர் திருடவும் வாய்ப்புகள் அதிகம்.

Ø நின்று கொண்டிருக்கும் காரில் மொபைலை மறைவாக வைத்து விட்டுச் செல்லவும்.


Ø உபயோகிக்கத் தெரியாதவரிடம் மொபைலை கண்டிப்பாகக் கொடுக்காதீர்கள். இயக்கும் முறை தெரியாமல் ஏதாவது பட்டனை அழுத்தினால், நீங்கள் ஸ்டோர் செய்து வைத்த பெயர்கள் மற்றும் எண்கள் அத்தனையும் அழிந்துவிட வாய்ப்புண்டு.

Ø சிறு குழந்தைகளை மொபைலை உபயோகிக்க அனுமதிக்காதீர்கள். அவர்கள் வேகமாயும், அழுத்தமாயும் பட்டன்களை அமுக்கினால் அவை வீணாகி விடும்.


Ø ஸ்கூட்டர், பைக், கரில் செல்லும்போது மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டே பயணிப்பது மிக ஆபத்து. ஓரமாக நிறுத்தி விட்டு பேசவும்.

Ø பொது இடங்களில், மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் பேசும்போது நம்மைச் சுற்றி இருப்போரை கவனத்தில் கொண்டு எந்த விஷயத்தையும் பேசவும். பணம், மற்றும் இருவர் தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவது சரியல்ல.


Ø ஃபோனை கம்பெனியில் தொடர்பு கொண்டு இன்ஸ்யூர் செய்யவும்.

Ø மொபைல் என்பது அவசரத்திற்கு, அவசியத்துக்கு பேச என்று கண்டுபிடிக்கப்பட்ட சாதனம். அதில் அநாவசியமாகவும், அர்த்தமில்லாமலும் பேசி அதன் பயனை வீணடிப்பது சரியல்ல.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக