காரட் கீர்
தேவையானவை
காரட் - ¼ கிலோ
பால் – 4 கப்
ஜவ்வரிசி - ½ கப்
முந்திரி – 10
திராட்சை – 10
சர்க்கரை – 1 கப்
ஏலப்பொடி, குங்குமப்பூ – சிறிது
பாதாம், பிஸ்தா துண்டுகள்
செய்முறை:
காரட்டைச் சீவி சற்று வேகவிட்டு முந்திரியுடன் அரைக்கவும்.
பாலுடன் 2 கப் நீர் சேர்த்து, கொதித்ததும், ஜவ்வரிசியை லேசாக வெறும் வாணலியில்
வறுத்து வேகவிடவும்.
ஜவ்வரிசி நன்று வெந்ததும், காரட் முந்திரி விழுதைப் போட்டு
சற்று கொதித்து வெந்ததும், சர்க்கரை போட்டு கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி,
குங்குமப்பூ போட்டு... துண்டாக்கிய பாதாம், பிஸ்தா, நெய்யில் வறுத்த திராட்சை
போட்டு குளிர வைத்து அருந்தவும்.
காரட் சட்னி
தேவையானவை:
துருவிய காரட் – 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
பொடியாக நறூக்கிய தக்காளி - ½ கப்
துருவிய தேண்காய் - ½ கப்
மிளகாய் வற்றல் – 8
தனியா – 2 டீஸ்பூன்
கடுகு, உப்பு, எண்ணெய்.
செய்முறை:
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெயில் கடுகு போட்டு வெடித்ததும்
காரட், தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கவும்.
நன்கு வெந்ததும் தேங்காய், மிளகாய் வற்றல், தனியா ஆகியவற்றை
நைஸாக அரைத்து, அத்துடன் கொட்டி சற்று கொதித்ததும் இறக்கவும். இது பூரி, இட்லி,
சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ளவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் சுவையாக
இருக்கும்.
காரட் பாத்
தேவையானவை:
துருவிய காரட் – 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ½ கப்
பச்சை மிளகாய் – 5
தனியா – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பெருங்காயம் – சிறு துண்டு
ஏலம் – 1, கிராம்பு – 1, ஜாதிக்காய் – சிறிது
பட்டை – சிறு துண்டு
கடுகு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை (தோல் நீக்கியது) – 1 டீஸ்பூன்
முந்திரி – 10
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு
செய்முறை
வாணலியில் முதலில் எண்ணெய் விடாமல் ஏலம், கிராம்பு, பட்டை,
ஜாதிக்காயை லேசாக வறுத்துப் பொடி செய்யவும்.
பின்பு 2 டீஸ்பூன் எண்ணெயில் தனியா, பெருங்காயம், மிளகாய்
வற்றலை வறுத்துப் பொடி செய்யவும். அதே வாணலியில் மீதி ஏண்ணெய், நெய்யை விட்டு
கடுகு போட்டு தாளித்ததும், கடலைப் பருப்பு, கடலை, முந்திரி சேர்த்து சிவந்ததும்,
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும், துருவிய காரட் சேர்த்து உப்புப் போட்டு நன்கு
வதக்கவும்.
காரட் பர்ஃபி
தேவையானவை:
காரட் – துருவியது - ½ கப்
தேங்காய் துருவல் - ½ கப்
சீனி - ¾ கப்
நெய் - ½ கப்
முந்திரி – 10 ஏலப்பொடி
செய்முறை:
சீனியை சிறிது நீர் விட்டு கம்பிப் பாகு வைத்து, அதில் தேங்காய், காரட் துருவலைப் போட்டுக்
கிளறவும். ஓரளவு கெட்டியானதும் நெய்யை விட்டு நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறி,
ஏலப்பொடி போட்டு, முந்திரியை சீவிப்போட்டு, நெய் தடவிய தட்டில் துண்டு போடவும்.
காரட் கேக்
தேவையானவை:
காரட் – 2 கப்
மைதா – 2 கப்
வெண்ணெய் - ¾ கப்
சீனி - 1½ கப்
பேரீச்சை (கொட்டை நீக்கி துண்டாக்கியது) – 1 கப்
முட்டை – 3
பேக்கிங் பவுடர் - 1½ டீஸ்பூன்
தேவையான எஸன்ஸ்
செய்முறை:
மைதா, பேகிங் பவுடரை சேர்த்து 3 முறை சலிக்கவும். காரட்,
பேரீச்சையை சீவி அரைக்கவும். சீனியைப் பொடியாக்கவும். மூன்றையும் நன்கு கலந்து
வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும். முட்டையை உடைத்து ஊற்றி எல்லாம் நன்கு
கலக்கும்படி செய்யவும் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். அத்துடன் மைதா,
எஸென்ஸ் சேர்த்து நன்கு கலக்கி ஓவனில் அரைமணி பேக் செய்து, கேக் பதமானதும் எடுத்து
உபயோகிக்கவும்.
காரட் ஸ்வீட் கோளா
தேவையானவை:
காரட் - ¼ கிலோ
மைதா - ¼ கிலோ
பால் – 1 கப்
சீனி - ¼ கிலோ
நெய் – சிறிது
முந்திரி – 10 (துண்டாக்கியது)
வறுத்த தேண்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
திராட்சை – 15
ஏலப்பொடி, எண்ணெய் – வேக விட
செய்முறை:
காரட்டைத் தோல் சீவி துருவி பாலில் வேக விடவும். பால்
சுண்டி காரட் வெந்ததும் சீனி, தேங்காய், முந்திரி, திராட்சை, ஏலப்பொடி, நெய்
சேர்த்துக் கிளறவும். பூரணம் போல் கெட்டியானதும் எடுத்து சிறு உருண்டைகளாக
உருட்டவும். மைதாவில் ¼ டீஸ்பூன் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து சிறு
பூரிகளை இட்டு, அதனுள் காரட் பூரணம் வைத்து உருட்டியதை போளி போல் தட்டி தோசைக்
கல்லில் நெய் தடவிப் போட்டு எடுத்து ‘காரட் போளி’ யாக செய்யலாம்.
காரட் வடை
தேவையானவை:
காரட் - ¼ கிலோ
கடலைப் பருப்பு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் வற்றல் – 2
இஞ்சி – 1 துண்டு
மிளகு - ½ ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு
உப்பு, பெருங்காயம், மற்றும் வெங்காயம் – 2
செய்முறை:
கடலைப் பருப்பை ½ மணி நேரம் ஊற வைத்து அத்துடன் பச்சை
மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு, பெருங்காயம் போட்டு
கரகரப்பாக அரைக்கவும். காரட்டைத் துருவவும். வெங்காயம், கொத்துமல்லியைப் பொடியாக
நறூக்கவும். கடலைப் பருப்பு விழுதுடன் காரட், வெங்காயம், கொத்துமல்லி சேர்த்துப்
பிசைந்து வடைகளாகத் தட்டி சட்னி, சாம்பாருடன் சாப்பிடவும்.
காரட் சூப்
தேவையானவை:
காரட் - ½ கிலோ
பெரிய வெங்காய - ½ கிலோ
பால் – 1கப்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கிரீம் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 1
மிளகு - ½ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன், உப்பு
செய்முறை:
காரட்டை சீவி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, குறைந்த அளவு
நீரில் இரண்டையும் வேகவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
காரட் பூரி
தேவையானவை:
காரட் - ¼ கிலோ
மைதா – 200 கிராம்
ரவை – 300 கிராம்
சீனி – 2 கப்
நெய், எண்ணெய் (பொரிக்க)
முந்திரி – 10
பாள் - ½ கப்
செய்முறை:
காரட்டுகளைத் துருவி வேகவிட்டு அரைக்கவும். ரவையை நெய்யில்
பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையைப் பாலுடன் கரைக்கவும்.
காரட் தோசை
தேவையானவை:
பச்சரிசி – 1 கப்
துருவிய காரட் - ½ கப்
மிளகாய் வற்றல் – 4
பெரிய வெங்காயம் – 1
புளி, சிறிது உப்பு
செய்முறை:
பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மற்ற சாமான்களுடன்
அரைத்து மெல்லிய ரவா தோசை போல் வார்க்கவும்.
மேலே சொன்ன சமையல் வகைகள் மட்டுமின்றி – 1கப் துருவிய காரட்டுடன் ½ கப்
வெல்லம் சேர்த்துக் கிளறி சிறிது ஏலப்பொடி சேர்த்து கொழுக்கட்டை பூரணமாக வைத்து ‘காரட் கொழுக்கட்டை’ செய்யலாம்.
துருவிய காரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்
வதக்கி, ப்ரெட்டிற்கு நடுவில் வைத்து டோஸ்ட் செய்து ‘காரட்
சாண்ட்விச்’ செய்யலாம்.
½ கப் துருவிய காரட்டை சற்று வதக்கி, பெருங்காயம், உளுத்தம்
பருப்பு, மிளகாய் வற்றலை வறுத்து ¼ கப் தேங்காய், சிறிது புளி, உப்புடன் சேர்த்து
அரைத்து ‘காரட் துவையல்’ தயாரிக்கலாம்.
சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து, துருவிய காரட்டை வதக்கி சேவையுடன் கலந்து ‘காரட் சேவை’ தயாரிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக