அனுமன் சிலை
இந்தியாவில் பெரும்பாலான மக்களின் முக்கிய தெய்வங்களாக
விளங்குபவர்கள் கணபதியும், ஆஞ்சநேயரும். ஒரு சின்ன சந்து, மூலை, மரத்தடி எங்கும்
கோவில் கொண்டு பக்தர்கள் குறைகளைத் தீர்க்கும் தெய்வங்கள் இவை.
ஆஞ்சநேயருக்கு பல ஆலயங்களில், பல்வேறுபட்ட நிலைகளில் உயரமான,
கம்பீரமான சிலைகள் உள்ளன. இந்தியாவிலேயே மிக உயரமான அனுமன் சிலை நவி மும்பை
தெருவில் உள்ள எஸ்.ஐ.ஈஎஸ் கல்லூரி வளாகத்தினுள் உள்ளது.
33 அடி உயரமும், 55 டன் எடையும் கொண்டு ஒரே கிரானைட்
கல்லால் செய்யப்பட்ட இச்சிலை, ஆஞ்சனேயரின் விசுவரூபமாகக் காட்சி தருகிறது. தாமரை
மலரில் கைகளைக் கூப்பியபடி, தியான நிலையில் அற்புதக் காட்சி தருகிறது. தாமரை
மலரில் கைகளைக் கூப்பியபடி, தியான நிலையில் அற்புதக் காட்சி தரும் அனுமனுக்கு கை
வளையல்கள், காது குண்டலங்கள், கேயூரங்கள், காலில் தண்டைகள் இவை மேலும் அழகு
சேர்க்கின்றன. எங்குமில்லாத வகையில் வால் இரு கால்களுக்கிடையே வந்து கீழே
இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. அவரது தூய்மையான பக்தி பாவத்தைக் காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக