குமுதம்
சிநேகிதி மார்ச் 1, 2006 இதழில் வெளியானது.
ஒரு எட்டு வயது சிறுமி என்னென்ன செய்வாள்? ஸ்கூலுக்குப் போவாள், ஹோம்
ஒர்க் எழுதுவாள், விளையாடுவாள், போகோ
சேனல் பார்த்துவிட்டு, டெடி பியரைக் கட்டிப் பிடித்து
தூங்குவாள்.
ஆனால், மும்பையைச்
சேர்ந்த தக்க்ஷிணா முரளிதர், சாதனை செய்து கொண்டிருக்கிறாள்!
உறைய வைக்கும் மார்கழிப் பனியில், அரபிக் கடலின் ஆளை விழுங்கும் அலைகளைச் சமாளித்தபடி,
சுமார் பதினாறு கிலோமீட்டர் தொலைவை அனாயாசமாக நீந்திக்
கடந்திருக்கிறாள் தக்க்ஷிணா.
மும்பை கடலின் நடுவே உள்ளே எலிஃபெண்டா குகையிலிருந்து, கேட் வே ஆஃப் இந்தியா வரையான இந்தத் தொலைவைக் கடக்க,
இந்த எட்டு வயது 'பொடிசு' எடுத்துக் கொண்ட நேரம் மூன்று மணி, இருபது
நிமிடங்கள் மட்டுமே!
மும்பை தானாவின் வசந்த் விஹார் ஹைஸ்கூலில் மூன்றாவது வகுப்பு
படிக்கும் தக்க்ஷிணா, மூன்று
வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி செய்தபடி பல நீச்சல் போட்டிகளிலும் கலந்து கொண்டு,
ஏராளமான பரிசுகளை வாங்கியிருக்கிறாள்.
"நான் நீச்சல்ல இன்னும் நெறைய சாதனைகள்
செய்யணும். இதனால என் வீட்டுல... ஏன், நம்ம நாட்ல
எல்லோருக்கும் பெருமையா இருக்குமே!" என்று கண்கள் மின்ன சொல்கிறது இந்தச்
சாதனை வாண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக