Thanjai

Thanjai

வெள்ளி, 18 மார்ச், 2011

குழந்தைகளும் கம்ப்யூட்டரும்

மங்கையர் மலர் இணைப்பு – பிப்ரவரி – 2001 இதழில் வெளியானது

இன்றைய விஞ்ஞான உலகில் கம்ப்யூட்டர் ஒரு வரப்பிரசாதம். இருந்த இடத்திலிருந்தே ஒரு பட்டனைத் தட்டி விட, அந்த இயந்திரம் செய்யும் மாயம்தான் என்ன? எத்தனையோ பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள மகனிடமோ, மகளிடமோ, வெப் காமிரா இணைப்பு மூலம் அவர்களைப் பார்த்துக் கொண்டே பேசுவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்?

குழந்தைகள் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆவலில் கம்ப்யூட்டர் வாங்கும் பெற்றோர்கள் மனத்தில் பயமும் இருக்கிறது. குழந்தை பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டரோடு செலவழித்தால் படிப்பது எப்படி?

சாதாரணமாக எல்லா பெற்றோர்களுக்கும் ஏற்படக்கூடிய நியாயமான கேள்விகள் இவை –
கம்ப்யூட்டரை குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக எப்படி உபயோகப்படுத்தலாம்?
தொலைக்காட்சி, வீடியோ கேம் போல கம்ப்யூட்டருக்கும் குழந்தைகள் அடிமையாகி விட்டால்?
எப்பொழுதும் கம்ப்யூட்டர் முன்னாலேயே அமர்ந்திருக்கும் போது வெளிப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, விளையாட்டு இவை குறைகின்றதே?
நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பதால் உடல் நலக் கோளாறு வருமா?
இண்டர்னெட் – இது தேவையானதும், தேவையற்றதும் நிரம்பிக் கிடக்கும் சமுத்திரம் – அதிலுள்ள இருட்டிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?

இவற்றிற்கான பதில்களையும், சில இணைய தளங்களின் (வெப் சைட்) பெயர்களையும் வாசக சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் எழுந்ததே இக்கட்டுரை.

1. கம்ப்யூட்டர் அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டாம் வகுப்பு முதல் ஒரு பாடமாக இருப்பதால், முறைப்படி அதைக் கற்கும் ஆறு வயதுக் குழந்தை கூட அதைச் சுலபமாய் கையாள முடியும். குழந்தைகளுக்கு இது ஒரு விளையாட்டுத் தோழனாகவும், சிறந்த ஆசிரியராகவும் இருப்பதை நாம் மறுக்க முடியாது. இவ்வகையில் உதவ பல வகை காம்பாக்ட் டிஸ்க் எனப்படும் சிடிக்கள் உள்ளன. அவை குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். அவற்றில் சில –
டார்லிங்க கிண்டர் ஸ்லே
க்ரியேடிவ் வொண்டர்ஸ் – லெட்டர்ஸ்
க்ரியேடிவ் வொண்டர்ஸ் – லெட் அஸ் மேக் வேர்ட்
க்ரியேடிவ் வொண்டர்ஸ் – நெம்பர்ஸ்
லீப் அஹெட் ஃபோனிக்ஸ்
சில இணைய தளங்களின் பெயர்கள்:

2. குழந்தைகளை விளையாட்டுடன் படிக்க வைப்பது எப்படி?
1. அவர்கள் பாடங்களிலிருந்து கடினமான வார்த்தைகளை டிக்டேஷன் கொடுத்து அவற்றைக் கம்ப்யூட்டரில் டைப் அடிக்கச் சொல்லவும். முதலில் எழுத்துக்களைத் தேட குழந்தைகள் சற்று தடுமாறினாலும் நாளடைவில் வேகமாக அடிக்கப் பழகி விடுவார்கள்.
2. கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு அர்த்தமும், அவற்றை உபயோகித்து வாக்யங்களும் அமைக்கச் சொல்லவும். தினந்தோறும் 10, 15 வார்த்தைகளைக் கொடுத்து இவ்வாறு செய்யும் போது, பின்னால் பரீட்சை சமயம் படிக்கச் சுலபமாக இருக்கும்.

புதிய சாதனைகளைச் செய்யும் கருவியான கம்ப்யூட்டரைக் காணும் எந்தக் குழந்தையும் படிப்பு, விளையாட்டு, தூக்கம் எல்லாம் மறந்து சதா கம்ப்யூட்டர் முன்னாலேயே இருக்க விரும்புகிறார்கள். இதை எப்படித் தவிர்ப்பது?

குழந்தைகளை பாட்டு, நடனம், பொழுது போக்கிற்கான சிறுவர் சங்கம் இவற்றில் சேர்த்து விடலாம்.
கம்ப்யூட்டரிலேயே ஒரு கால அட்டவணை போட்டு அதில் கம்ப்யூட்டர் போட ஆரம்பித்த நேரம், முடிக்கும் நேரம் இவற்றைக் குறிக்கச் சொல்லலாம்.
தினமும் ஒழுங்காகப் படித்து வீட்டுப் பாடங்களை முடித்தால் அரை மணி அதிகமாக கம்ப்யூட்டர் போடலாம். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் ஒரு மணி நேரம் அதிகமாக கம்ப்யூட்டர் போடலாம் என்று கூறலாம்.

எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருக்காமல், பாட சம்பந்தமான சாஃப்ட்வேர்களைப் போட்டு, அதன் மூலம் அறிவுத் திறனை அதிகரிக்கலாம்.

3. எப்பொழுதும் கம்ப்யூட்டர் முன்னாலேயே அமர்ந்திருக்கும் குழந்தைக்கு மற்ற விஷயங்களில் நாட்டம் குறையாமல் இருக்க அவர்களை தினமும் சில மணி நேரங்களாவது மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கண்டிப்பாக விளையாடச் சொல்லவும். குழந்தைகளுக்கு ஆர்வமுள்ள துறைகளில் இசையோ, புத்தகங்களோ அவற்றிற்கான சாஃப்ட்வேர்கள், இணைய தளங்களின் உதவியோடு அந்தத் துறைகளைப் பற்றி நிறைய அறிந்து முன்னேற உதவுங்கள். அதற்கான தளங்கள்:
கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டே சாப்பிடுவதைக் கண்டிப்பாக அனுமதிக்காதீர்கள்.

4. அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கும் போது உடல் நலக் கேடுகள் வர வாய்ப்புண்டு. கண் வலி, கை வலி, முதுகு வலி மற்றும் அஜீரணம் ஏற்படலாம். கைவிரல்களில் வலி ஏற்படுவது சகஜம். இவற்றை நீக்குவது எப்படி?
திரைக்கு ஒரு ஆண்டிக்ளேர் ஸ்க்ரீன் போடவும்.
பின்னால் சாய்ந்து உட்காரும் நாற்காலி உபயோகிக்கவும்.
திரை குறைந்த பட்சம் கண்ணீலிருந்து 25” தூரத்திலிருக்க வேண்டும்.
அறையின் வெளிச்சம் மிக அதிகமாகவும், மிகக் குறைவாகவும் இருக்கக் கூடாது.

5. கம்ப்யூட்டரில் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருந்தால் எப்பொழுது குழந்தைகள் படிப்பது என்கிறிர்களா? பயப்படாதீர்கள்! கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்! குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாடும்போது ஒரு இலக்கை நோக்கி ஒரு குறிக்கோளுடன் அவர்கள் விருப்பத்திற்கேற்ப முன்னேறூவது பாராட்டப் பட வேண்டிய விஷயம் தானே? இதையே அவர்கள் படிப்பிற்குத் திசை திருப்புங்கள். கல்விக்குத் தேவையான, அறிவைப் பெருக்கக்கூடிய ஒரு தலைப்பு கொடுத்து அதை பற்றிய செய்திகளை இண்டர் நெட்டில் தேடச் சொல்லுங்கள். அவற்றைப் பற்றிய விஷயங்களை நன்கு ஆழ்ந்து படித்த பின், அவற்றிலிருந்து நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறச் சொல்லுங்கள். அதற்கான சில தளங்களின் விபரம்:
       www.dvinetime.com
       www.reading.com
       www.eduplace.com/kids

6. அதிக அளவில் நல்ல, உபயோகமான செய்திகளையும், கூடவே வேண்டாத செய்திகளையும் தருவது இண்டர்நெட். தீமைகளும் உண்டே என்பதற்காக இண்டர்நெட் தேவையில்லை என்றால், அதனால் ஏற்படும் நன்மைகளையும் நாம் சேர்ந்தே இழக்கிறோம். இதில் குழந்தைகள் நிறைய கற்கலாம். புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம். பல சோதனைகளைச் செய்யலாம். என்னும் எவ்வளவோ?

குழந்தைகள் மட்டுமல்ல. பெரியோர்களுக்கும், இல்லத்தரசிகள், ஆராய்ச்சி மாணவர்கள், டீன் ஏஜ் குழந்தைகள், வங்கிப் பணி புரிவோர், முதியோர் என்று அத்தனை பேருக்கும் ஏற்றவாறு எத்தனை விஷயங்களைப் பற்றி அறிய முடிகிறது? இண்டர்நெட் என்பது ஒரு பிக்னிக் எனலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை (இது 15 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கே பொருந்தும்!) அவர்கள் பார்க்க வேண்டிய உபயோகமான தளங்களைப் பற்றி ஒரு குறிப்பு எழுதச்  சொல்லுங்கள். இது அவர்களின் எழுத்துத் திறமையை வளர்க்கும்.

அதிக நேரம் உபயோகிக்கும்போது தொலை பேசி கட்டணமும் அதிவேகமாக ஏறுமென்பதால், முக்கியமான, தேவையான விஷயங்களைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ள இண்டர்நெட்டைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள். அநாவசியமான, கல்வி சம்பந்தமற்ற தளங்களைக் காண அனுமதிக்காதீர்கள். பெற்றோர்கள் இது பற்றி அறிய சில தளங்கள்:
       www.disney.com
       www.parentsoup.com
       www.ivillage.com
       www.smartparent.com
பொதுவாக தந்தையைவிட தாயே குழந்தைகளின் படிப்பு மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளது நாம் அறிந்ததே. குறைந்த பட்ச ஆங்கில அறிவு உள்ள தாய்மார்கள் கூட கம்ப்யூட்டரையும், இண்டர்நெட்டையும் இயக்குவது எளிது. எனவே, பெண்கள் கம்ப்யூட்டர் பற்றி தெரியாது, அது தேவையற்றது என்று எண்ணாமல் அவற்றைப் பற்றி முறையாக இயக்கக் கற்பது அவசியம். மேலும் அநாவசியமாக அடுத்தவர்களைப் பற்றிய பேச்சு, அபத்தமான தொலைக் காட்சித் தொடர்களிலிருந்து விலகி, இண்டர் நெட்டில் பெண்களுக்கான சில தளங்களைப் பார்த்தால் சமையல், உடல் நலம், அழகு, குழந்தை வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு, உலகளாவிய சாதனைகள் என பல அவசியமான, அற்புதமான செய்திகளை அறிந்து பயன் பெறலாம். பெண்களுக்கான சில தளங்கள்:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக