அந்த நாள் முதல் இந்த நாள் வரை
தேன் ஒரு நல்ல உணவு. அத்துடன் சிறந்த மருந்தும் கூட. மேலும் தோலை மென்மையாகவும்,
வறண்டு போகாமலும் இளமையைக் காக்கும் சக்தியும் தேனுக்கு உண்டு.
தினமும் குளிக்கும் நீரில் ஒரு
ஸ்பூன் தேன் கலந்து குளித்துப் பாருங்கள். முகச் சுருக்கங்கள் போயே போய் விடும்.
முகம் சுருக்கமடைந்து, வறண்டு போய்
விட்டதா? ஒரு முட்டையை உடைத்து வெள்ளைக் கரு, மஞ்சள் கருவை தனித் தனியாக
எடுக்கவும். மஞ்சள் கருவுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேன்
சேர்த்து நன்கு கலக்கவும். அதில் வெள்ளைக் கருவையும் சேர்த்து, கலவை லேசாகவும்,
மிருதுவாகவும் ஆகும் வரை கலக்கவும். இதை கழுத்து, உதட்டின் மேல் புறம்,
கன்ன்ங்கள், முகவாய், நெற்றி ஆகிய இடங்களில் நன்கு பூசி 15 நிமிடங்கள் காய
விடவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவிய பின், உங்கள் தோலின் பட்டுத் தன்மையை
நீங்களே உணர்வீர்கள்.
இது போல் ஒரு டீஸ்பூன் பாதாம்
எண்ணெயும், ஒரு டீஸ்பூன் தேனும் கலந்து உபயோகிக்கலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு
டீஸ்பூன் சந்தனப் பவுடர், ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி.
½ டீஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு அல்லது கடலை மாவு.
1 டேபிள் ஸ்பூன் பால், 1 டீஸ்பூன்
தேன், ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி.
மேற்கண்ட சாமான்கள் நம் வீட்டிலேயே
இருப்பவை. செய்வதும் சுலபம். இவற்றுடன் சில துளிகள் பன்னீர் சேர்த்து முகத்தில்
தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.
இந்தக் கலவைகளை கண்டிப்பாக
கண்களிலோ, கண்களைச் சுற்றியோ தடவக் கூடாது.
முதலில் முகத்தை கிளென்ஸிங் கிரீமீனால்
சுத்தம் செய்யவும். பின் ஈரத்துணியால் முகத்தை நன்கு துடைத்த பின்பே, மேற்கண்ட
மாஸ்க்குகளைத் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்கு மேல் ஊற விடக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக