சேஷ கருட புராணாத்தில் சதாபாரத
ஸ்தோத்திரம் ஒன்று உள்ளது. பிரம்மன் நாரதருக்குக் கூறிய 100 அபசாரங்களில் சில:
Ø விளக்கு ஏற்றும் பொழுதும், விளக்கு
இல்லாத போதும் கோயிலுக்குள் செல்லக் கூடாது.
Ø பகவானுக்கு நேர் எதிர் வழியாகச்
செல்லாமல் பக்கத்து வழியாகச் செல்ல வேண்டும்.
Ø மணமற்ற பூக்களை பகவானுக்கு
சமர்ப்பிக்கக் கூடாது.
Ø இறைவன் முன் தனி மனித
புகழ்ச்சிகளையும், தற்புகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும்.
Ø சமய ஏற்றத் தாழ்வு பற்றி பேசி
வாதாடல் கூடாது.
Ø துளசியை நீர் கொண்டு அலம்பியோ,
மற்ற பூக்களை அலம்பாமலோ இறைவனுக்கு சமர்ப்பிக்கக் கூடாது.
Ø கோயிலுக்குள் சென்று தீர்த்தம்,
சடாரி, துளசி பிரசாதம் பெறாமல் திரும்பக்கூடாது.
Ø பலிபீடம், துவஜஸ்தம்பங்களுக்கும்,
கருவறைக்கும் இடையே குறுக்கே செல்லக் கூடாது.
Ø ஆமணக்கு எண்ணெய் விளக்குகள்
கோயிலுக்குள் ஏற்றக் கூடாது.
Ø பெருமாள் சன்னதியில் அர்ச்சகர்
தரும் துளசி, தீர்த்தம், குங்குமப் பிரசாதங்களை தரையில் சிந்தவிடக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக