Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

ஆஹா...அருகம்புல்

சிநேகிதி மார்ச் 2003 இதழில் வெளியானது




இயற்கை மருத்துவத்தில் அருகம்புல்லுக்கு பெரும் பங்கு உண்டு. எல்லா வியாதிகளையும் விரட்டி, உடலுக்கு ஆரோக்கியம் தரும். அருகம்புல் குப்பை மேட்டில், சாலை ஓரங்களில் முளைத்தாலும் அற்புத ஆற்றல் கொண்டது! விநாயகப் பெருமான் தன் வயிற்று எரிச்சலுக்கு அருகம்புல்லை உண்டே குளிர்ச்சி செய்ததாக புராண வரலாறு கூறுகிறது.

உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல் ஜூஸை காலை வேளைகளில் காப்பிக்கு பதிலாக குடிப்பது மிக நல்லது என்று இயற்கை மருத்துவம் கூறுகிறது, அதன் வேறு சில பலங்களையும் பார்ப்போம்.

  • ·       அருகம்புல்லை அரைத்துத் துணியில் வைத்துக் காயம் பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால், விரைவில் குணம் அடையும்.
  • ·       மூக்கில் ரத்தம் வரும்போது, அருகம்புல் சாற்றை சில சொட்டுகள் மூக்கில் விட ரத்தம் வருவது நிற்கும்.
  • ·       அருகம்புல் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தினால் மலச்சிக்கல், ஆஸ்துமா, தோல் நோய், வயிற்று வலி ஆகியவை நீங்கும். அருகம்புல்லுடன் மிளகு, சீரகம் கலந்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட ‘ப்ளட் ப்ரஷர்’ கட்டுக்குள் வரும்.
  • ·       நல்லெண்ணெயுடன் அருகம்புல் கலந்து வெயிலில் காய வைத்து, சில நாட்கள் ஊறியதும் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் பார்வை பிரகாசமாகும். சூடு தணியும்.
  • ·       உடலின் கழிவுகள், நச்சுத் தன்மைகளை ‘நச்’சென்று நீக்கும் அருகம்புல் சாறு! புல் என்று நினைக்காமல் அதனை நன்கு சுத்தம் செய்து அலம்பி உப்யோகித்தால் கைமேல் பலன் பெறலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக