Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

இண்டெர்நெட் எனும் கற்பகத்தரு


மங்கையர் மலர் மார்ச் 2003 இதழில் வெளியானது




இந்தக் கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள தளங்களைக் காண வேண்டுமானால், மவுசை (Mouse) தேவையான தளத்தின் மேல் வைத்து ‘க்ளிக்’ செய்தால் குறிக்கப்பட்டுள்ள தளத்திற்கு செல்ல முடியும், சில தளங்கள் கிடைக்க வில்லையெனில் அவை இல்லை என்று கொள்ளவும்.
வரப்போவது பரீட்சை மாதம்! படிக்கும் குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு வீடும் எவ்வளவு டென்ஷனாக இருக்கும் என்பது நாம் அறிந்த்தே! மாணவ மாணவியரை விட, அவர்களின் பெற்றோர், முக்கியமாகத் தாய்மார்களின் பொறுப்பும், கவனிப்பும் கூடும் நேரமிது. டீ.வி., கம்ப்யூட்டர், இண்டர்நெட் வேண்டாமே! என்றெல்லாம் எச்சரிக்கலாம். ஆனால் இண்டர்நெட் மூலமும் பரீட்சைக்குத் தேவையான பல விஷயங்களை அறியலாம்.

இண்டர்நெட், படிக்கும் குழந்தைகளுக்கும், கற்பிக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஒரு கற்பகத் தரு! வரப்பிரசாதம்! உலகில் எந்த மூலையிலுள்ள விஷ்யத்தையும் நம் உள்ளங்கை அசைப்பில் காட்டும் விஞ்ஞான விந்தை! இல்லத்தரசிகள் இண்டர்நெட் இயக்குவது பற்றி முறையாகக் கற்றுக் கொண்டு, தங்கள் குழந்தைகளின் பரீட்சை நேர சந்தேகங்களைத் தீர்க்கலாமே! பயனுள்ள சில இணைய தளங்களைப் பார்க்கலாமா?

1. என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) britannica.com. இது மிக முக்கியமான தளம். இதில் இந்தியாவுக்குத் தனிப் பிரிவு உள்ளது.
http://britannica.comhttp://britannicaindia.com இவ்விரண்டு தளங்களிலும் பரீட்சைக்கு உதவும் பல கட்டுரைகள் உள்ளன. இவை தவிர மேலும் சில என்ஸைக்ளோபீடியா தளங்கள்:
எல்லா தளங்க்களிலும் குறிப்பிட்ட, தேவையான பாடங்கள் பற்றிய விவரங்களை அங்குள்ள ‘ஸர்ச்’ (search) ‘கமாண்டை (command) உபயோகித்து, அந்தப் பக்கங்களுக்குச் சென்று குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். என்ஸைக்ளோபீடியா ‘சிடி’ (CD) க்கள் கடிகளில் கிடைக்கும். இவற்றை இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர்களில் போட்டுப் படிக்கலாம். ஆனால் இண்டர்நெட் மூலம் காணும் போது இவ்வகை சிடிக்களில் இருப்பதை விட, அதிக விஷயங்கள், குறிப்புகள் கிடைக்கும் – காரணம், அவ்வப் பொழுது தளங்களில் புதிய செய்திகள் சேர்க்கப்படுவதே.
2. சிறந்த பொது அறிவுத் தளங்கள்:
1. ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானி,  நாடு, நிகழ்ச்சி பற்றிய விவரம் தேவையா? நீங்கள் காணவேண்டிய தளம்:
2. ஆங்கில மேற்கோள்கள், பழமொழிகள் பற்றிய தளம் இது. 9000க்கு மேல் பழமொழிகள் உள்ளன.
3. ஒரு வார்த்தை, அதன் பொருள், அதனை உபயோகிக்கும் முறை, அதன் எதிர்ப் பதமான வார்த்தை என்று பல விஷயங்களை இத் தளம் மூலம் அறியலாம். உதாரணமாக ‘find’ என்ற வர்த்தையின் உபயோகங்களுடன், அதன் எதிர்ப் பதமான ‘Lose’ என்ற வார்த்தை பற்றியும் அறியலாம். தளத்தின் முகவரி:
4. நாம் ஆங்கிலத்தில் எழுதும் போதும், பேசும் போதும் சரியாக, இலக்கணத்துடன் பேசினோமா என்ற கவலையைப் போக்கும் தளம்:
5. ஆங்கில அகராதிகளும் தளங்களில் உண்டு. அவை:
6. நூற்றுக் கணக்கான பாடங்கள், பல இணைய தளங்களுக்கான இணைப்பு, மாணவர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், ஆராய்ச்சிகள் அடங்கிய கல்விக்கான முதன்மைத் தளம்:
3. மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கான பொது அறிவுத் தளங்களை இதுவரை பார்த்தோம். இனி வரக்கூடிய பரீட்சைக்கு உதவியாக இருக்கும் சில தளங்களின் முகவரிகள்.
·       இயற்பியல் பற்றி சந்தேகமா? அதற்கான தளம்: http://www.ncte.in.org/smartphysics/index.html
·       ஆங்கிலத்தை இரண்டாம் பாட மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு உபயோகமான தளம்: http://www.eslcafe.com
·       மாதிரி பரீட்சை வினாத் தாள்கள் மற்றும் விடைத் தாள்களுடன் இருக்கும் தளம்: http://learning/inditime.com/index.html
·       ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ள தளம்: http://www.schoolcircle.com
·       ஆங்கில இலக்கணம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினா விடைகள், ஷேக்ஸ்பியர் நாவல்கள் இவற்றைப் படிக்க மாணவர்கள் செல்ல வேண்டிய தளம்: http://education.eth.net
·       எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், பாடங்களை கீழுள்ள தளத்தில் tutor@home என்ற பகுதியில் கற்கலாம்: http://www.zeelearn.com
·       11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உபயோகமான தளமான இதில் ‘utilities’ என்ற பகுதி முக்கியமானது. http://www.indbazaar.com/education/index.asp
·       உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே ஹோம்வொர்க், பாடப் பயிற்சி கொடுக்க வேண்டாமா? செல்லுங்கள் கீழுள்ள தளத்துக்கு: http://www.marksheet.com
·       மாணவர்களுக்குத் தேவையான பாடங்கள், பயிற்சிகள், பயிற்றுவிக்கும் முறைகள் இவை யாவும் சிடியாகவும் உள்ளன. இவற்றையும் இண்டர்நெட் மூலமே பார்த்து, தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். அதற்கான இணைய தள முகவரி: http://www.spellcheck.com
·       ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழ் அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் தளங்களும் உண்டு: http://www.tamil.net/learn-tamil/tamildic.html
மேலே நான் குறிப்பிட்டுள்ளவை மிகக் குறைவான தளங்களே. இது போன்று கல்வி, வினாத்தாள், மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுப் பயிற்சி, வெளி நாட்டில் கல்வி போன்ற பல உபயோகமான தளங்களும் உண்டு.

இண்டர்நெட் எனும் ஆழ்கடலில் மூழ்கினால், பற்பல அற்புத முத்துக்களைக் கொண்டு வரலாம். ஆனால் அதை அறிவு பூர்வமாக, சரியான முறையில் நம் குழந்தைகளைப் பயன்படுத்தும்படி செய்யும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மைச் சேர்ந்தது.


ஆங்கில அறிவு அதிகமில்லாத இல்லத்தரசிகள் கூட அபத்தமான தொலைக் காட்சித் தொடர்களில் தம்மைத் தொலைப்பதை விடுத்து, சற்று ஆர்வமும் அக்கறையும் எடுத்து கம்ப்யூட்டரையும் , இண்டர்நெட்டையும் இயக்கக் கற்றுக் கொண்டு, தம் அறிவையும் விரிவடையச் செய்து, தம் குழந்தைகளுக்குத் தேவையான பல விஷயங்களையும் கற்றுக் கொடுத்து, அவர்களைச் சிறந்த மாணாக்கர்களாக உருவாக்கலாம். இண்டர்நெட் இயக்கினால் ஃபோன் பில் ஏறுமே என்று பயப்படுகிறீகளா? தேவையான பாடங்களை, குறிப்புகளை, கட்டுரைகளை கம்ப்யூட்டரில் ‘சேவ்’ அல்லது ‘டவுன் லோட்’ செய்தால், தேவையான போது குழந்தைகள் படித்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகள் நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக