வெயிலில் நாம் வெளியில்
செல்லும்போது ஏற்படும் வியர்வையினால் சோடியம், பொட்டாசியம், குளோரின் போன்ற தாது
உப்புகளை நாம் அதிக அளவில் இழக்க நேரிடுகிறது. நிறைய தண்ணீர் குடிப்பதால் தாகம்
அடங்கும். ஆனால் இழந்த சத்துக்களை பெற நீர் உதவுவதில்லை. இதனால் மயக்கம், சோர்வு,
குறைந்த ரத்த அழுத்தம், தலை கிறு கிறூப்பு போன்றவை ஏற்படுகிறது.
இதற்கு பாட்டில்களில் அடைக்கப்பட்ட
பழரசம், கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடுவதால், அதில் அளவுக்கதிகமாக சேர்க்கப்
பட்டிருக்கும் சர்க்கரை நம் உடல் நிலையை மேலும் சீர் கேட்டடையச் செய்யும். இதற்கு
இயற்கையான காய்கறிகள், பழங்களில் தயாரிக்கப்படும் ஜூஸே மிகச் சிறந்தது.
பன்னா:
நல்ல காயான மாங்காய்களை நீரில்
முழுதாக வேகவைக்கவும். நன்கு வெந்த பின் தோலை நீக்கி சத்தை நன்கு கரைத்து
அடுப்பில் வைத்து வெல்லம் சேர்க்கவும். (புளிப்பான உருண்டை வடிவ மாங்காய்
இரண்டிற்கு அரை கப் வெல்லம்).
சில புதினா இலைகளை அரைத்துச்
சேர்க்கவும். 1 ஸ்பூன் மிளகுப் பொடி, 1 ஸ்பூன் சீரகப் பொடி, சிட்டிகை உப்பு
சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, தேவையான போது தண்ணீர் சேர்த்து
அருந்தவும். இதனால் தாகம் அடங்குவதுடன், உடலுக்கும் மிக நல்லது.
இளநீர்
இதில் பல தாது உப்புகளும், குறைந்த
அளவே சர்க்கரைச் சத்தும் இருப்பதால், அனைவரும் சாப்பிடலாம். இது சிறு நீரக
பிரச்சனை, தைராய்டு பிரச்சனைகளுக்கு மிக நல்ல மருந்து.
தர்பூசணி
மிக அதிக அளவுள்ள தாது உப்புகள்,
பொட்டாசியம் அடங்கிய தர்பூசணி உடலுக்கு மிகவும் குளுமை தரும். இதை அப்படியே
சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள் குறைவாகச் சாப்பிடுவது நல்லது.
நுங்கு
ஆங்கிலேயர்களால் ‘ஐஸ் ஆப்பிள்’
எனப் பாராட்டப்பட்ட நுங்கு மிக அதிக சத்துக்களும், நீர்ச் சத்தும் கொண்ட்து. ஒரு
டம்ளர் இள நீரில் சில நுங்குத் துண்டங்களைப் போட்டு ஃபிரிட்ஜில் 15 நிமிடங்கள்
வைத்துச் சாப்பிட்டால், உடல் குளுமையாவதை நன்கு உணர முடியும்.
புதினா ஜூஸ்
புதினாவை அலம்பி அரைத்து வடிகட்டி,
அதோடு தேன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட களைப்பு நீங்கும். வைட்டமின் ‘சி’
சத்து இதில் அதிகம்.
நெல்லிக்காய்
பெரிய நெல்லிக் காய்களை அப்படியே
சாப்பிடலாம். ஜூஸ் செய்து அருந்தலாம்.
வெள்ளரி ஜூஸ்
வெள்ளரிப் பிஞ்சுகளை சீவி
மிக்ஸியில் அரைத்து அதில் சிறிது உப்பு, எலுமிச்சை சாறு கலந்து பருகவும், சர்க்கரை
சேர்த்தும் ஜூஸாக்கி அருந்தலாம்.
அதிக கொழுப்பு, சர்க்கரை அதிகமான
இனிப்புகள்
இவற்றைச் சாப்பிடாமல்
தவிர்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக