விநாயகர் சதுர்த்தியை முதன் முதலில் கொண்டாடிய கணபதி
லோக மான்ய பால கங்காதர திலகர்,
1893-ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தியை மக்கள் திருவிழாவாகப் பத்து நாட்கள் கொண்டாட
வேண்டுமென்று அறிவித்தார்.
பூனாவில் கோயில் கொண்டு அருள்
பாலிக்கும் தக்டுசேத் கணபதியே திலகரின் அறிவிப்புக்குப் பின் முதல் விழா
கொண்டாடியவர்! அன்று முதல் இன்றுவரை தினமும் விழாக் கோலமாகக் காட்சி தரும் இந்த
கணபதி, பூனாவின் முக்கிய கடைத் தெருவான லட்சுமி ரோடில் கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீமான்
தகடுசேத் ஹல்வாயி என்பவர், தன் கடை அருகில் ஸ்தாபித்து, வணங்கி வந்த இந்த
விநாயகர், இன்று பூனா மக்களின் இதயத்தில் மிக முக்கிய இடத்தில் விளங்குகிறார்.
கண்ணைப் பறிக்கும் நகைகள், சொக்க
வைக்கும் அழகு, அருள் சிந்தும் கண்கள், அற்புதமான, விசித்திரமான அலங்காரத்துடன்,
கால்கள் சப்பணமிட்டு, கீழ் வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் மோதகமும் கொண்டு,
இடப்பக்கம் திரும்பிய துதிக்கை சுருண்டு நான்கு அடி உயரத்திற்கு மேல் காட்சி தரும்
கணபதியைக் காண கண்கள் இரண்டும் போதாது. புராணச் சிறப்பு, வரலாறு என்று எந்தப்
பின்னணியும் இல்லாமல் மகாராஷ்டிராவில் மிகப் பிரபலமான ஆதர்ச, ஆத்மார்த்த தெய்வமாக
விளங்குகிறார் தகடுசேத் கணபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக